வெள்ளி, 18 செப்டம்பர், 2009

சில வரிகள்..


நிழலை கண்டு
நிஜமாய் உருகாதே!
காட்சி பொருளெல்லாம் காணலே!
புற தோற்றம் புதுமைதான் அதில்
அகம் உருகுவது அர்த்தமற்றது.

செவ்வண்ண அந்தியே!
ஏனிந்த கோபம்?
வானில் முகிலின்றி
மகிழ முடியவில்லையா?

இரவின் விதவைக்கு
குங்கும பொட்டாய் வாழ்வு
தந்த காலை கதிரே!
உன்னொளி பட்டுவிட்டால்
எல்லாம் மங்கலமே!

இரவுகள் என்றும் நிரந்திரமாவை,
உறவுகள் எல்லாம் சிறு வெளிச்சம்களே!
தன் பங்கிற்கு எரிந்து விட்டு செல்லும்.
உன்னுள் நீ ஒளிர்ந்தால் மட்டுமே
வாழ்வு வெளிச்சமாய் அமையும்..



புதன், 16 செப்டம்பர், 2009

பொய்


உலகில் பொய் என்பது
எதுவும் இல்லை,
சொல்வது பொய் என்றால்
சொல்பவன் மெய்யே!
கானல் பொய் என்றால்
காண்பது மெய்யே!
வாழ்வது பொய் என்றால்
வாழ்க்கை மெய்யே!
வெளிச்சம் யார் மீது பட்டாலும்
நிழல் விழுவது போல்
உண்மையின் நிழல்தான் பொய்.
நிழலான பொய் எல்லாம்
நிஜமாய் நிலைப்பதில்லை,
சில உண்மைகளை மறைக்கும்
நிழல்கள்தான் அவை!
அஸ்தமனத்தில் உண்மை மட்டுமே
விளக்கேற்றும்...

திங்கள், 14 செப்டம்பர், 2009

ஒளிர்ந்திடு!


உடலென்ற அகழுக்கு
உள்ளமென்ற திரியிட்டு
உணர்வென்ற எண்ணையிட்டு
வாழ்வென்ற ஜோதி ஏற்றி
அன்பென்ற ஒளியாய்
ஒளிர்ந்திடு...

பிம்பங்கள்


உருவத்தின் பிம்பம் நிழல்கள்
உள்ளத்தின் பிம்பம் நினைவுகள்
உருவ பிம்பங்கள் மறைந்துவிடும்
உள்ளத்தின் பிம்பங்கள் மறைவதில்லை..

ஞாயிறு, 13 செப்டம்பர், 2009

போராட்டம்



போராட்டங்கள், எதிர்நீச்சல்கள் என
ஆயிரம் மூழ்கினேன், முங்கினேன்
சுயநலம் எனும் சேற்றில் விழுந்திருந்தால் கூட
சிறு மண்ணாவது மிஞ்சியிருக்கும்,
எஞ்சியிருப்பது உயிர் மட்டும்தான்
மண்ணாகிபோவதற்கு!!
உறவை துறவு கொண்டால்தான்
வரவு கூட உறவு கொள்ளும்...