வெள்ளி, 9 அக்டோபர், 2009

ஒளி



கிழக்கு முகத்திற்கு
சிகப்பு செந்தூரமிட்டவிடியல்
முகப்பு வெளிச்சம்
முற்றம் வந்தது,
மாற்றம் இல்லா விடியலை ஏற்று
மாசு இல்லா மனதால் விழித்திடு...

அக்னி பந்தொன்று கண்டேன்
மெல்லினமாய் புன்னகைத்தது
இளங்காலை விடிந்ததென்று..
வல்லின ராகம் மீட்டிடும் வேளைக்கு
வெயிலோன் வரும்முன்
துயிலை விழித்திடு மயிலே!

உலகினை படம் பிடித்த கதிரொளி
உணர்வுகளையும் படம் பிடித்து சென்றது
அந்தியில்...

பொன்னிற ஒளி சிந்தும் மாலைபொழுது
ஆய கலைகளில் சிற்பத்தையும் ஓவியத்தையும்
இணைத்தாற்போல் மேற்கு மேகம் காவியமாய்..


மஞ்சளிட்ட அந்தியே!
நான் அஞ்சலிட்ட சேதி
கண்டுவிட்ட காரணமோ!
நின் வண்ணம் நாணம் பூண்டு
செவ்வண்ணம் ஆகியதே!!