வெள்ளி, 4 செப்டம்பர், 2009

துளிகளே!


விழிகளை பிரிந்த துளிகளே!
உன் வலிகளை புரிந்த
வார்த்தைகள் இவை.
பார்வை மட்டுமே உலகம் என்ற விழிகளுக்கு
பாதை காட்டிட பிறந்தாயோ!
இதயத்தின் ஆனந்தத்திலும் பொங்கினாய்,
ஆழத்திலும் பொங்கினாய்.
உப்பு கடலில் முத்தை படைத்தவன்தான்,
உள்ள கடலில் உன்னையும் படைத்தான்.
இதயம் வார்த்தைகளற்று போகும்போது
இதழ்களுக்காக பேச பிறந்தாயோ!
அகத்தின் பக்கத்தில்
அன்பின் சுவடுகள் கண்டவர்களுக்கு,
முகத்தின் பக்கத்தில்
உப்புசுவடுகள் நீ.
விண்ணை பிரியும் மழை நீர்தான்
மண்ணை புரியும்,
உன்னை பிரியும் கண்ணீர்தான்
என்னை புரியும்.

7 கருத்துகள்:

யாத்ரா சொன்னது…

நண்பரே உங்கள் அழைப்பிதழ் மிகவும் கவர்ந்தது,உங்கள் சில கவிதைகளைப் படித்தேன், நன்றாக எழுகிறீர்கள், தொடர்ந்து எழுதுங்கள், வாழ்த்துகள்.

Ashok D சொன்னது…

நல்லாயிருக்கு...


சுடும் நீர்....
‘வலியின் மிச்சம்
காய்ந்த இரு
வரிகள் கன்னத்தில்’

என் முதல் கவிதை
வலையுலகில்.

யாத்ரா பாரட்டிட்டார்... அப்ப நீங்க கவிஞர்தான். நிறைய படிங்க மற்றவர் மனதை.

cheers

பா.ராஜாராம் சொன்னது…

புகை படமும் கவிதையும் அருமை!
அழைப்பிதல் அருமையோ அருமை!
வாழ்த்துக்கள் நண்பா!

சந்தான சங்கர் சொன்னது…

முதல் வருகைக்கு நன்றி
யாத்ரா,
இனி என் யாத்திரையை நலமுடன்
தொடர்வேன்.

சந்தான சங்கர் சொன்னது…

மிக்க நன்றி அசோக்,
உங்கள் முதல் கவிதை அருமை..

மிக்க நன்றி பா. ராஜாராம்

குடந்தை அன்புமணி சொன்னது…

கவிதைகள் நன்று. இன்னும் இன்னும் எழுதுங்க. மேம்பட வாழ்த்துகள்.

நேசமித்ரன். சொன்னது…

yaathraa, paa.raa
ivangale solitttaangalaaa

appram enna
vaazhthukkal en pangukku

தொடர்ந்து எழுதுங்கள்
நிறைய படிங்க
வாழ்த்துக்கள் நண்பா!