கைவண்டி இழுப்பவனின்
ஏழ்மையை சொல்லிடும்
எலும்பு வரிகள்..
ஆற்றங்கரையில் சாயம்
வெளுக்கின்றான்
சாதிகள் எனும் சாயத்தை
வெளுக்கமுடியாமல்..
பருந்தின் பார்வைக்கு
தவறிய குஞ்சுகள்
எலும்பு குவியலாய்
குப்பை மேட்டில்...
விடுதலை கிடைத்தவுடன்
தற்கொலையா!!
முறைத்துக்கொண்டும்
நுரைத்துக்கொண்டும் பொங்கிய
மதுபானம் விழப்போவது கழிவறைக்குள்
என்பதால்!!!
மறைந்துவிட்ட ஒளியினை
அழுதுகொண்டே தேடிய
மெழுகுவர்த்தி..
பேதையாய்
பிறந்ததால் என்னவோ!
மடந்தையாகியும்
மணமாகாத முதிர்கன்னி..
மழை பொழிகிறது
மாசுகளின் சாயம் துடைத்திட,
மதம் பொழிகிறது
மனிதர்களுக்கு சாயம் பூசிட...
8 கருத்துகள்:
//விடுதலை கிடைத்தவுடன்
தற்கொலையா!!
முறைத்துக்கொண்டும்
நுரைத்துக்கொண்டும் பொங்கிய
மதுபானம் விழப்போவது கழிவறைக்குள்
என்பதால்!!!//
திரும்பவும் சமூகத்தோடு ஒரு கண்ணோட்டம்.இந்தப் பந்தியை திரும்பத் திரும்ப வாசித்தேன்.
அப்பாடி....எடுத்திட்டீங்களா சொல்சரிபார்ப்பு.நன்றி சங்கர்.
//ஆற்றங்கரையில் சாயம்
வெளுக்கின்றான்
சாதிகள் எனும் சாயத்தை
வெளுக்கமுடியாமல்..//
உங்கள் ஆழமான கருத்துள்ள கவிதையை ரசித்தேன். வாழ்த்துக்கள்.
பின்னோட்டத்தின்
கண்ணோட்டம் அழகு.
என் ஓட்டம் சிறந்திட
ஓர் ஊக்கம்
நன்றி ஹேமா..
உங்கள் வருகைக்கும்
வாழ்த்துக்கும் மிக்க நன்றி
ஜெஸ்வந்தி..
//ஆற்றங்கரையில் சாயம்
வெளுக்கின்றான்
சாதிகள் எனும் சாயத்தை
வெளுக்கமுடியாமல்..//
//மறைந்துவிட்ட ஒளியினை
அழுதுகொண்டே தேடிய
மெழுகுவர்த்தி..//
அருமையான வரிகள்..... வாழ்த்துக்கள்.........
நல்லா இருக்கு சங்கர்.உங்களை ஒரு தொடர் பதிவுக்கு அழைத்திருக்கிறேன்.நேரம் வாய்க்கிறபோது தளம் வாங்களேன்..
"மறைந்துவிட்ட ஒளியினை
அழுதுகொண்டே தேடிய
மெழுகுவர்த்தி"
புதிய சிந்தனை.
வாழ்த்துக்கள்.
இலுப்பவனின் -ezhuththup pizhai...
இரசிகை
இழுப்பவனின்..
திருத்திக்கொண்டேன்..
வருகைக்கு மிக்க நன்றி..
கருத்துரையிடுக