திங்கள், 28 செப்டம்பர், 2009

விழியே!

ஒளியே!
நீ பிறந்தாய்
உலகம் விடிந்தது,

விழியே!
நீ பிறந்தாய்
என் உள்ளம் விடிந்தது.

மொழியே!
நீ பிறந்தாய்
உலகம் பேசியது,

விழியே!
நீ பிறந்தாய்
என் உள்ளம் பேசியது.

காதலே!
நீ பிறந்தாய்
கனிவு பிறந்தது,


விழியே!
நீ பிறந்தாய்
என்னுள் துணிவு பிறந்தது.

அன்பே!
நீ பிறந்தாய்
உலகம் பணிந்தது,

விழியே!
நீ பிறந்தாய்
என் உள்ளம் கனிந்தது.

ஜோதியே!
நீ பிறந்தாய்
பக்தி பிறந்தது,

விழியே!
நீ பிறந்தாய்
என்னுள்சக்தி பிறந்தது.

பெண்மையே!
நீ பிறந்தாய்
மென்மை பிறந்தது,

விழியே!
நீ பிறந்தாய்
என்னுள் மேன்மை பிறந்தது.

உயிரே!
நீ பிறந்தாய்
ஜனனம் பிறந்தது,

விழியே!
நீ பிறந்தாய்
என்னுள் நான் பிறந்துவிட்டேன்...

5 கருத்துகள்:

விஜய் சொன்னது…

உங்கள் கவிதையில் நானும் புதிதாய் பிறந்தேன்

Thenammai Lakshmanan சொன்னது…

உங்கள் விழியிலும் மொழியிலும் அன்பு பிறந்திருக்கின்றது சந்தான சங்கர்...

நல்ல கவிதை

வாழ்த்துக்கள்

Admin சொன்னது…

நல்ல வரிகள் இரசித்தேன்

ஹேமா சொன்னது…

விழிகள் தேவையில்லை.அன்புவிழி போதும் வழிகாட்ட.விழியைத்தானே உடம்பின் புண் என்றார்கள்.

Unknown சொன்னது…

jananam endra kavithai kooruvathu enna