ஞாயிறு, 20 செப்டம்பர், 2009

நவீனமாக்கப்பட்ட நகரம்

தொடர்வண்டி திட்டத்தால்
இடர்பட்ட மரங்கள்,
சிறகொடிந்தும் சிரிக்கின்றது
வண்ணம் மாற பூக்களுடன்.

ஆலயத்தை மிஞ்சும்
செல்லிடை கோபுரங்களின்
அலைவீச்சில் மரித்துவிட்ட
சிட்டுகளின் மெட்டுக்கள்.

வற்றிவிட்ட ஊரணியில் ஓர் அணியாய்
முளைத்துவிட்ட வீடுகள்.

ஆலைய நுரையீரல்களின்
புகை சுவாசத்தால்
மேக இமைகளில் அமில கண்ணீர்.

பிள்ளை வரம் வேண்டும் வீட்டில்
வாகன உறக்கத்திற்காக
வீழ்த்தப்பட்ட தென்னம்பிள்ளை.

தரை துளைப்பானின்
தொடர் தாக்குதலில்
எலும்புகள் உடைந்து பீரிட்ட
பூமித்தாயின் பச்சை ரத்தம்.

இயற்கையின் இசையெல்லாம்
ஒதுக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு
ஒலிக்கின்றது இன்றைய மங்கையின்
செவிகளை அடைத்துக்கொண்டு.

இயற்கையின் முன் நவீனமாக்கப்பட்ட
நரகமாய்...

15 கருத்துகள்:

ஹேமா சொன்னது…

விஞ்ஞான வினையால் இயற்கையின் அழிவு.அத்தனையும் உண்மை.
ஆனால் சிந்திக்க யார் ?அதன்வழிதானே நாங்களும்.

சங்கர்,சொல் சரிபார்ப்பை நீக்கிவிடுங்களேன்.பின்னூட்டம் இட வசதியாய் இருக்கும்.

விஜய் சொன்னது…

மிக நல்ல கற்பனை வளம் சங்கர், தொடருங்கள்.

மேவி... சொன்னது…

"சங்கர்,சொல் சரிபார்ப்பை நீக்கிவிடுங்களேன்.பின்னூட்டம் இட வசதியாய் இருக்கும்."


ஆமாங்க மிக பெரிய வேக தடையாக இருக்கு அது பின்னோட்டம் போட



"இயற்கையின் இசையெல்லாம்
ஒதுக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு
ஒலிக்கின்றது இன்றைய மங்கையின்
செவிகளை அடைத்துக்கொண்டு.

இயற்கையின் முன் நவீனமாக்கப்பட்ட
நரகமாய்..."

intha varigal nalla irukku

மேவி... சொன்னது…

thiratti la sernthachaa???

மேவி... சொன்னது…

me th 5 th

மேவி... சொன்னது…

பெரிய வார்த்தை எல்லாம் உஸ் பண்ணுரிங்க .... எனக்கு பயமா இருக்கு சார்

மேவி... சொன்னது…

இயற்கையின் படைப்பான மனிதன் தான் அதன் அழிவுக்கும் காரணம்.... கொடுமையா இருக்கு ல

மேவி... சொன்னது…

"கவிதை(கள்) கூறியது...
மிக நல்ல கற்பனை வளம் சங்கர், தொடருங்கள்."


அட பாவமே ..... அவர் இன்றைய நிலையை பற்றி சொல்லி இருக்காருங்க

மேவி... சொன்னது…

9

மேவி... சொன்னது…

iiii


naan thaan 10 thavathu

மேவி... சொன்னது…

பொறுமையாய் எல்லா கவிதைகளையும் வாசித்தேன் .... நல்ல இருக்கு

சந்தான சங்கர் சொன்னது…

ஹேமா

வாழ்த்துக்கு மிக்க நன்றி.
சொல் சரிபார்பை நீக்கிவிட்டேன்.
தொடர்ந்து உங்கள் வாசிப்பு நல்ல ஊக்கம்.

கவிதைகள்,
வருகைக்கும் வாழ்த்துக்கும்
மிக்க நன்றி நண்பரே.

டம்பி மேவி
பின்னூட்ட மழை நீங்கள்,
சொல் சரிபார்ப்பு நீக்கிவிட்டேன்.
வாழ்த்துக்கு மிக்க நன்றி.

விஜய் சொன்னது…

தம்பி மேவி இன்றய நடப்பை நல்ல கற்பனை வளத்துடன் சங்கர் சொல்லியிருக்கர்னு சொன்னேன்.

விஜய் சொன்னது…

தம்பி மேவி உங்க ஊர்ல இருந்து நான் நாற்பது கிலோ மீட்டர்ல தான் நான் இருக்கேன். திருச்சி குசும்பு எனக்கும் உண்டுப்பா.

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

அண்ணா ப்லாக்ல நீங்க வச்சுருக்குற மாதிரி நிறைய பேர் குளத்துலயோ ஆத்துலயோ வாழ்ற மீனையெல்லாம் வீடுல ஒரு சின்ன தொட்டிக்குள்ள போட்டு வளர்க்குறாங்க அதப்பத்தியும் எழுதுங்களேன் அதுவும் இயற்கைக்கு புறம்புதானே....