வியாழன், 29 அக்டோபர், 2009

ஆனந்த நேசம்


இளையராஜாவின்
இசையில் சங்கீதமேகம் தேன் சிந்தும் நேரம்...
பாடல் எல்லோரும் கேட்டிருப்பீர்கள்.
அதில் சில வரிகள் மாற்றி ஓர் பாடல்.

ஆனந்த நேசம் உன் வாழ்வில் வீசும்
பொன்மாலை தீபம் சூடும் நேரம்..
ராகம் ஒரு தீபமே! என்னில் ஒளி வீசுமே!
வீசும் ஒளி யாவும் என் பாசமே!

ஆனந்த நேசம்.....

காணும் கனவுகள் கண்ணிலே
காலம் வரைந்திடும் உன்னிலே
வீணை மொழிதனில் வானை அழைத்திட
நீ...ஓடி வா...
எந்தன் ஏட்டில் வந்த பாட்டில்
இசையாய் ஒலித்தேன்,
எந்தன் ஏட்டில் வந்த பாட்டில்
இசையாய் ஒலித்தேன்
பாடல் ஓர் தேடலே...

ஆனந்த நேசம்...

அன்பு என்னும் கீதமே!
ஆள பிறந்திடும் நாதமே!
உள்ள விழிகளில்
வெள்ளம் பெருகிடும் ஓர் ஜீவனே!
உன்னை தீட்டும் எந்த பாட்டும்
உறங்கா உறவே!
உன்னை தீட்டும் எந்த பாட்டும்
உறங்கா உறவே!
பாடல் ஓர் தேடலே....

ஆனந்த நேசம் உன் வாழ்வில் வீசும்,
பொன்மாலை தீபம் சூடும் நேரம்..
ராகம் ஒரு தீபமே! என்னில் ஒளி வீசுமே!
வீசும் ஒளி யாவும் என் பாசமே!



(குறை இருந்தால் மன்னிக்கவும்)
நன்றி.

20 கருத்துகள்:

விஜய் சொன்னது…

தமிழ் சினிமாவிற்கு ஒரு பாடலாசிரியர் கிடைத்து விட்டார்

வாழ்த்துக்கள்

விஜய்

சத்ரியன் சொன்னது…

சங்கர்,

என்னையும் ஒரு பாடகனாக்கியதற்கு நன்றிப்பா.
என் குரல்ல நானே மயங்கிட்டேனே...மக்கா.....!

நல்ல முயற்சி.

வாழ்த்துகள்!

க.பாலாசி சொன்னது…

முதல் பத்தியிலிருந்து கடைசி பத்தி வரை எல்லா இடத்திலும் வார்த்தைகளை அந்த இசைக்கேற்ப மிகச்சரியாக பொருந்தியிருக்கிறது நண்பரே...முக்கியமாக உங்களின் வார்த்தை விளையாட்டு அருமையாக உள்ளது...

வாழ்த்துக்கள் நண்பரே...

S.A. நவாஸுதீன் சொன்னது…

அருமையான முயற்சி நண்பரே!. நன்றாக வந்திருக்கிறது. வாழ்த்துக்கள்

ஹேமா சொன்னது…

சங்கர் என்ன திடீர்ன்னு இப்பிடிக் களத்தில.சொல்லவே இல்லையே.முயற்சி நல்லாவே இருக்கு.

சரி...பாடிப்பாக்கிறதுக்கு சத்ரியனையா கையோட வச்சிருக்கீங்க.நல்ல விஷயம்.

thiyaa சொன்னது…

வாழ்க சந்தான சங்கர் ஒளிமயமான எதிர்காலம் தெரிகிறது.
தமிழ் சினிமாவில் ஒரு புது அறிமுகமாகும் காலம் எப்போ?

நேசமித்ரன் சொன்னது…

மாத்திரை பிசகாமல் எழுதப் பழகுவது பார்த்து சந்தோசமாய் இருக்கிறது
மிக்க மகிழ்ச்சி . முயற்சிகளின் தொடரட்டும் . இது ஒரு போதை நண்பா . நான் கூட இரண்டு படங்களுக்கு எழுதி படம் வெளிவரவில்லை .. அது ஒரு காலம்

''ஆகா இன்றென்ன ஆகஸ்ட்டு பதினைந்தா
ஆறேழு தெய்வங்கள் கண் திறந்ததா ''

என்ற வரிகள் நினைவில் இருக்கின்றன

:)

இரசிகை சொன்னது…

nallaayirukku.....

Ashok D சொன்னது…

//மாத்திரை பிசகாமல் எழுதப் பழகுவது பார்த்து சந்தோசமாய் இருக்கிறது
மிக்க மகிழ்ச்சி//

நான்கூட ஏதோ அடிச்சிவிடறீங்கன்னு நெனச்சேன். மேலே மித்ரன் சொன்னவுடனே தான் மாத்திரை பிசகாமல் எழுதியிருக்கிங்கன்னு புரிஞ்சது...

அடிச்சு கலக்குங்க

Ashok D சொன்னது…

அப்புறம் ஒன்னு சொல்ல மறந்துட்டேன்.. என் பையன் காலைல இருந்த பப்பிக்கு முத்தம் கொடுத்தான் (நான் வியந்தேன்),
அப்புறம் ஃபிஷ் டேங்க்க க்ளிக்குக்குன்னே இருந்தான்...(புட் வைக்கறானா), மௌஸ்ஸ உடச்சுருவானோன்னு அவன முறைச்சிகிட்டே இருந்தேன்.

இன்றைய கவிதை சொன்னது…

சினிமாவுக்கு மற்றுமொரு வைரமுத்து?!
அருமை நண்பரே!

சந்தான சங்கர் சொன்னது…

இரண்டு நாளா வேலை அதிகம்
வலைப்பக்கமே வரமுடியவில்லை.

@விஜய்
எப்பொழுதும் முதல் கரமிடும்
உங்கள் அன்பு நிறைவு
நண்பா..

@சத்ரியன்
வரிகளை பாடி பார்த்ததற்கு
நிரம்ப மகிழ்ச்சி சத்ரியன்
ஹேமாவுக்கு பாட்டு பிடிக்கும்
சும்மா தமாஷ் பன்றாங்க.

@பாலாசி
அனைத்து வரிகளும் சரியாய்
பொருந்தியிருக்கின்றது என கூறியதற்கு
மிகுந்த நிறைவு உங்கள் வரவு
கவிதை உறவு.

@நவாஸ்
மிக்க மகிழ்ச்சி நண்பரே
தொடர்ந்து கரம் நீட்டுங்கள்..

@ஹேமா
வாங்க ஹேமா
சும்மா ஒரு புதிய முயற்சிதான்
சத்ரியன் பாடிட்டார் நீங்க
முனுமுனுத்தீங்களா?
நன்றி..

@தியா
அப்படியெல்லாம் ஆசை இல்லைங்க
அது ஒரு கடல்,
ஒரு முயற்சிதான்
மிக்க நன்றி தியா.

@நேசன்
வாங்க நேசன் இப்பதான்
முதல் முறையா வந்திருக்கீங்க
கவிதை எழுதி அழைத்தப்ப வரவில்லை
பாட்டு எழதி அழைத்தவுடன் வந்துவிட்டீர்கள்
நிரம்ப மகிழ்ச்சி.
உண்மைதான் நண்பா அது ஒரு போதைதான்.

@இரசிகை
நிரம்ப மகிழ்ச்சி ரசிகை
தொடர்ந்து வாங்க..

@அசோக்
வாங்க அசோக்
உங்க பையன் பப்பிய ரசித்திருக்கின்றான்
மீன் குஞ்சுக்கு புட் போட்டிருக்கின்றான்.
மௌச கிளிக்குனான்னு முறைச்சுருக்கீங்க
ஆனா நீங்க நேசன் சர்டிபிகேட் கொடுத்தபின்தான்
ரசிச்சுருக்கீங்க இப்ப நான் உங்களை முறைக்கின்றேன்..
(சும்மா)
மிக்க நன்றி நண்பரே.

@இன்றைய கவிதை
வாங்க நண்பா
அந்த அளவுக்கு நான் இன்னும் வளரல
உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி
தொடர்ந்து வாசியுங்கள்
உங்கள் பக்கமும் வருகின்றேன்..

Ashok D சொன்னது…

ஏன்னா நமக்கு இந்த இலக்கனம் (2சுழியா 3 சுழியான்னு குழப்பம் வேறு)இலக்கியமெல்லாம் ஒன்னும் தெரியாது சங்கர். யாராவது சொன்னாக்க அப்படியே catch பண்ணிக்கவேண்டியதுதான் :P

அன்புடன் நான் சொன்னது…

நல்லாயிருக்குங்க...

பா.ராஜாராம் சொன்னது…

நல்லா இருக்கு சங்கர்!

விஜய் சொன்னது…

சங்கர் தொடர் பதிவுக்கு அழைத்துள்ளேன் வாருங்கள்.

விஜய்

சந்தான சங்கர் சொன்னது…

அசோக்
ஓர் நகைசுவைக்காகத்தான்
சொன்னேன் நண்பா
நன்றி.

சி .கருணாகரசு
வங்க நண்பா உங்கள்
முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும்
மிக்க நன்றி..

பா.ரா
வாங்க ராஜாராம் உங்களைதான் எதிர்பார்த்தேன்
வந்துட்டீங்க நிரம்ப அன்பு மக்கா.

விஜய்.
வருகிறேன் விஜய்.

Vidhoosh சொன்னது…

http://vidhoosh.blogspot.com/2009/11/blog-post_04.html

Please accept this gift from me with deep appreciation for your blog.

-vidhya

சத்ரியன் சொன்னது…

//பாடிப்பாக்கிறதுக்கு சத்ரியனையா கையோட வச்சிருக்கீங்க.நல்ல விஷயம்.//

ஹேமா,

கையோட இல்ல ஹேமா, வலையோட வச்சிருக்கார். நான் நல்லாப் பாடுவேன் தெரியுமா?

Admin சொன்னது…

நன்றாக எழுதி இருக்கின்றீர்கள்