ஞாயிறு, 11 அக்டோபர், 2009

தேவதையின் வரம்!



ஈழத்தின்
ஈனங்கள்..

ராவணன் எல்லாம்
ராணுவனாய்.. தேசத்து
சீதைகளுக்கெல்லாம்
சிதையிட்ட கேவலம்
மரித்த நாயினும் கேடாய்..
புத்த பூமியில்
மொத்த அவலமாய்..

இலங்கமும்
கலிங்கமாய்
கலங்கியதேன் ஒண்டும்
விளங்கல்ல..

ஈழத்தின்
ஈன குரல்களுக்கு செவி
சாய்க்காமல்
சாய்ந்துவிட்ட அந்தியே!
மீண்டும்
முகடேறி
முறை செய்ய வந்ததேன்?
இழவு நாட்டில்
எத்தனை சிதைகள் என்று
உளவு பார்க்க வந்தாயா?
விடியல் என்ற போர்வையில்
விடியாத பூமிக்கு..

உலகெல்லாம் என் பந்தம்
என் தேசத்தில் மட்டும்
ஏன் தீப்பந்தம்?
சமூகம் எமக்களித்த
போர்பந்தமா?

இனமெல்லாம் தனலிட்டபின்
மணலிட்ட உரம்தானே! இனி
வரமிட்டு வாழ்வது யாரிங்கே?
வரமென்று வேண்டாம்
கரமொன்று நீட்டுங்கள்
கையாலாகாத பூமியில்
கையளவாது ஈரம் மிஞ்சட்டும்...



ஊக்கமும்
ஆக்கமும்
ப.ரா , ஹேமா

14 கருத்துகள்:

S.A. நவாஸுதீன் சொன்னது…

இனி
வரமிட்டு வாழ்வது யாரிங்கே?
வரமென்று வேண்டாம்
கரமொன்று நீட்டுங்கள்
கையாலாகாத பூமியில்
கையளவாது ஈரம் மிஞ்சட்டும்...

வலிகள் மட்டுமே மிஞ்சி இருக்கிறது

Ashok D சொன்னது…

என்ன செய்வது நாடு உதவ மறுத்துவிட்டது என்பதே உண்மை.

நல்லா வந்திருக்கு தேவதையின் வரம். வரம் பலிக்கட்டும்

Thenammai Lakshmanan சொன்னது…

உலகெல்லாம் என் பந்தம்
என் தேசத்தில் மட்டும்
ஏன் தீப்பந்தம்

thevathaiyin varam arumai santhana shankar

விஜய் சொன்னது…

என்னுடைய ஈழம் பற்றிய கவிதையை விட உங்கள் கவிதை உயர்ந்து இருப்பதாக தெரிகிறது. ஆஹா இதைபற்றியெல்லாம் நான் சிந்திக்காமல் விட்டு விட்டேனோ என்று தோன்றுகிறது.
வாழ்த்துக்கள்.

அ.மு.செய்யது சொன்னது…

க‌ர‌ங்கொடுக்க‌ நாங்க‌ளும் இருக்கிறோம்..நல்ல‌ க‌விதை ச‌ங்க‌ர் !!!

//கையாலாகாத பூமியில்
கையளவாது ஈரம் மிஞ்சட்டும்... //

இந்த‌ வ‌ரிக‌ள் அச‌த்த‌ல் !!!

ஹேமா சொன்னது…

தேசம் .என் தேசம் அது எதுவாய் இப்போ.என் சனங்கள் ?என்னை அழவைக்கவா காலையிலேயே அழைப்போடு வந்தீங்க.சங்கர் அழுதுவிட்டுப் போகிறேன்.சொல்ல ஒண்டும் இல்லை எனக்கு வரேல்ல.

அதே சிதைக்குள் கிடக்கும் நானும் ஒரு சீதைதான்.இராவணன்கள் கைக்கு இன்னும் அகப்படாத முகமூடியோடு தூரமாய் இங்கு.

பாலா சொன்னது…

கையாலாகாத பூமியில்
கையளவாது ஈரம் மிஞ்சட்டும்

மிஞ்சுமா ???
மிஞ்சனும் அதே viruppam
valikku etra varikal

Vidhoosh சொன்னது…

அருமை. வாழ்த்துக்கள்.
--வித்யா

இரசிகை சொன்னது…

nallaayirukku.....

பா.ராஜாராம் சொன்னது…

அருமை சங்கர்!

kanmani சொன்னது…

sankar! Manam azhntha parattukkal...nee ovvoru unarvukalaium purinthu kolpavan yendru yenaku therium. intha ulagathirku ippozhuthu therium un "thevathain varam" moolam. innum un muyarchikal vettriyadaiya vazhthukkal....

சந்தான சங்கர் சொன்னது…

நவாஸ்
முதல் கரமிட்டமைக்கும்
உங்கள் தள கரமிட்டமைக்கும்
பெரு நன்றி..

அசோக்
மறிக்கப்பட்ட கரங்களாய் நாம்
உண்மைதான் நண்பரே..

தேனம்மை
உங்கள் நட்பின் வாழ்த்துக்கு
மிக்க நன்றி தோழியே..

விஜய்
வலிகளை யார் கூறினாலும்
எப்படி கூறினாலும் வலிகளே!
நன்றி நண்பரே..

ஹேமா
மன்னிக்கவும் உங்களை அழ வைத்ததற்கு..
இதற்கு நீங்களே முன்னுதாரணம்.
உங்கள் ஈழ கவிதைகளும் வார்த்தைகளும் என்னை இவ்வாறு
எழுத வைத்துவிட்டது.
பின்னோட்டத்திற்கு முன் சிந்திய விழிநீர்...
இதைவிட உயர்ந்த விருது எதுவுமில்லை எனக்கு..
நன்றிகள் பல..

பாலா
உங்கள் மனக்கலவியில் உதித்த வரிகளில்
உறைந்து போயிருக்கின்றேன்..
முதல் வருகைக்கும் அன்பிற்கும் மிக்க நன்றி..

செய்யது..
உங்கள் அன்பிற்கும் வருகைக்கும் மிக்க நன்றி
நண்பரே..

வித்யா
உங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள் பல..

ரசிகை
ஒரு குறியீடு
ஒரு பின்னோட்டம்
ரசனையின் விளக்கமாய்.
நன்றி ரசிகை.

பா . ரா
தொடர் கவிதைக்கு
கால நேரம் அதிகம் எடுத்துகொண்டேன்
உங்கள் ஊக்கம் இன்னும் சில பல பதிப்புகளாய் தொடர
உந்துகிறது நன்றி மக்கா..

கண்மணி
உங்கள் அன்பிற்கும் வாழ்த்துக்கும்
என்றென்றும் உதிற்கின்றேன் நல்கவிதைகளாய்..

thiyaa சொன்னது…

nisamaana varikal

velji சொன்னது…

ஆதங்கமும்,வேதனையையும் கவிதையாக்கிருக்கிறீர்கள் நண்பா.

கலிங்கத்தில் அசோகன் மனம் மாறினான்.பக்க்ஷே தேர்தலை அவசரமாய் நடத்தி வெற்றி பெறவும்,சீனா முதலீடுகளை குவித்து வணிகவும் செய்யவும் அல்லவா இறந்த உறவுகள் முதலீடாக ஆகிவிட்டார்கள்!