சனி, 6 பிப்ரவரி, 2010

காகிதங்களின் கைகளில்...


இன்னமும் கரைந்து கொண்டிருக்கின்றேன்
கணங்களைப்போல்,
கடமையின் கால் விலங்கு அறுந்து
நடை பழகும் குழந்தையாய் நான்.
வருடங்கள் மட்டும் இலையுதிர் காலமென
என் இளமை உதிர்த்து செல்கிறது.
துணை தேட விழைந்த பயணம்
தூசி தட்டி திறக்கும் ஜாதக பக்கங்கள்.
பன்னிரு கட்டங்களில் மட்டுமே
பயணிக்கும் மண வாழ்க்கை.
பிறந்த கணங்களிலேயே அன்பை உணர்ந்தும்
பகிர கிடைக்காத நிலை.
அவளால் மட்டுமே உணரக்கூடிய அன்பு
அச்சு பதிக்கும் காகிதங்களின் கைகளில்...
.
.
.

9 கருத்துகள்:

விஜய் சொன்னது…

சீக்கிரம் ஜாதக பக்கங்களை மூடி வாழ்க்கை பக்கத்தினை புரட்ட ஆண்டவனை வேண்டுகிறேன்

வாழ்த்துக்கள்

விஜய்

ஹேமா சொன்னது…

கவிதையின் கருப்பொருள் நல்லாயிருக்கு சங்கர்.இன்னும் தொடரும் இந்தச் சாபக்கேடுகளுக்கு முற்றுப்புள்ளி
யார் வைப்பார்...எப்போ ?

சந்தான சங்கர் சொன்னது…

விஜய்

நன்றி நண்பா
உங்கள் வாழ்த்து கிடைக்கப் பெற்ற
மகிழ்ச்சி.

ஹேமா

என்ன செய்வது தோழி
இது காலம் காலமாக தொடரும்
பழக்கமாகவே இருந்து வருகிறது.
அன்பு மட்டுமே தகர்த்தெறியும் எறியமுடியும்.

kanmani சொன்னது…

kanavugal niraiverum...ini yendrum aananthamea...best of luck...

வாணி நாதன். சொன்னது…

சவுக்கடி போல இருந்தது... மிகவும் அருமை தோழா...

உங்களில் அன்பை உணரக்கூடிய வாழ்க்கை கிடைக்க வாழ்த்துக்கள்...

கலா சொன்னது…

சங்கர் திருமணம் ஆகவில்லையென்றால்!!??

அந்த..காகித எழுத்துகளைத்
தகர்தெறிந்து சாதியுங்கள்

நீங்கள்தான் வருங்காலத் தூண்கள்
இதனால் பாதிக்கப்பட்ட முதிர்கன்னிகள்
வாழத் தொடங்கட்டும்!! நன்றி

கமலேஷ் சொன்னது…

கவிதைனூடே பல வலி தெரிகிறது தோழரே...

நினைவுகளுடன் -நிகே- சொன்னது…

அருமை அழகு
உங்களின் அன்பை உணரக்கூடிய வாழ்க்கை கிடைக்க வாழ்த்துக்கள்...

thenammailakshmanan சொன்னது…

//அவளால் மட்டுமே உணரக்கூடிய அன்பு
அச்சு பதிக்கும் காகிதங்களின் கைகளில்//

அருமை சங்கர்
பின் தொடர்பவர்கள் காட்ஜெட்டை சேர்த்தல் பின் தொடர வசதியாய் இருக்கும் சங்கர்