திங்கள், 14 பிப்ரவரி, 2011

அன்பில் மட்டும் அர்த்தமாகி..உன்னை விழிக்க செய்து 
உறங்கி போகும் நினைவுகள்.. 


காலத்தின் கணிசமான 
இழப்புகளையும் ஈடு செய்ய 
துடிக்கும் அலைபேசி பரிமாற்றங்கள்..


நிஜங்களில் திளைந்து 
நினைவுகளை சுமந்து 
கனவுகளை கரை சேர்க்க 
துடிக்கும் இந்த புனித பயணம்.


வாழ்வின் மாற்றங்களில் 
மாற்றம் தராத உன் நேசம்..


துடித்து செல்லும் காலத்திலும் 
அடித்து செல்லாத உன் அன்பு..


அடுத்து சொல்ல வார்த்தை இல்லை 
அன்பில் மட்டும் அர்த்தமாகி போகிறேன்.. 


16 கருத்துகள்:

ஹேமா சொன்னது…

கனவுகளை நிறைவேற்ற அலைபேசியோடு கனக்கும் அன்பு அர்த்தமாகி நிற்கிறது வரிகளில்.
அன்பு வாழ்த்துகள் சங்கர் !

சந்தான சங்கர் சொன்னது…

வருகைக்கும் வாழ்த்துக்கும்
மிக்க நன்றி தோழி..

சி.கருணாகரசு சொன்னது…

கவிதை மிக இயல்பாய்.... அன்புகலந்திருக்கு.....
பாராட்டுக்கள்.

பெயரில்லா சொன்னது…

//
அடுத்து சொல்ல வார்த்தை இல்லை
அன்பில் மட்டும் அர்த்தமாகி போகிறேன்..
//

ஆமாங்க வேறென்ன சொல்ல முடியும் இதைவிட..

சந்தான சங்கர் சொன்னது…

கருணாகரசு

வருகைக்கும் வாழ்த்துக்கும்
மிக்க நன்றி நண்பா.

தமிழரசி

உண்மைதாங்க..
வாழ்த்துக்கு நன்றி தோழி..

வாணி நாதன். சொன்னது…

"வாழ்வின் மாற்றங்களில்
மாற்றம் தராத உன் நேசம்.."

மிகவும் அழகான, உண்மையான வரிகள்...

நன்றி தோழா,

சந்தான சங்கர் சொன்னது…

நீண்ட நாட்களுக்கு பின்
வருகை புரிந்திருக்கும்
தோழி வாணிக்கு நன்றி

Raja சொன்னது…

//மாற்றம் தராத உன் நேசம்//

//அன்பில் மட்டும் அர்த்தமாகி போகிறேன்//

நெகிழவைக்கும் வரிகள்...வாழ்த்துக்கள் நண்பா...

kanmani சொன்னது…

"Valvin Maatrangalil
Maatran Tharatha Un Nesan"

intha unmaiyana varigalukku yen kodana kodi nantrigal....

kadhalukku idhai vidu vera vari thevaiyea illai..

title fantastic nanba..

சந்தான சங்கர் சொன்னது…

ராஜா

வாழ்த்துக்கு நன்றி நண்பா

கண்மணி

வரிகளை ரசித்து சொன்ன
கண்மணிக்கு மிக்க நன்றி..

வேடந்தாங்கல் - கருன் சொன்னது…

கவிதை மிக இயல்பாய்....

கலக்கல் தல....நம்ம கவிதையையும் கொஞ்சம் எட்டுப்பார்த்துட்டு கருத்த சொல்லுங்க....

http://sakthistudycentre.blogspot.com/2011/02/blog-post_21.html

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

அலைபேசி பரிமாற்றங்கள் ஈடு செய்ததா இழப்பை.. சந்தான சங்கர்..:))

சந்தான சங்கர் சொன்னது…

கருண்

முதல் வருகைக்கு
நன்றி நண்பரே.

தேனம்மை

வாங்க சகோதரி
இப்பெல்லாம் அதுதானே
உதவுகிறது

சத்ரியன் சொன்னது…

//வாழ்வின் மாற்றங்களில்
மாற்றம் தராத உன் நேசம்..//

சந்தானசங்கர்,

அழகிய நேசம்.

சந்தான சங்கர் சொன்னது…

சத்ரியன்

வாங்க சத்ரியன்
வாழ்த்துக்கு நன்றி
நலம்தானே..

ஆயிஷா சொன்னது…

உண்மையான வரிகள்.வாழ்த்துக்கள்.