திங்கள், 14 பிப்ரவரி, 2011

அன்பில் மட்டும் அர்த்தமாகி..உன்னை விழிக்க செய்து 
உறங்கி போகும் நினைவுகள்.. 


காலத்தின் கணிசமான 
இழப்புகளையும் ஈடு செய்ய 
துடிக்கும் அலைபேசி பரிமாற்றங்கள்..


நிஜங்களில் திளைந்து 
நினைவுகளை சுமந்து 
கனவுகளை கரை சேர்க்க 
துடிக்கும் இந்த புனித பயணம்.


வாழ்வின் மாற்றங்களில் 
மாற்றம் தராத உன் நேசம்..


துடித்து செல்லும் காலத்திலும் 
அடித்து செல்லாத உன் அன்பு..


அடுத்து சொல்ல வார்த்தை இல்லை 
அன்பில் மட்டும் அர்த்தமாகி போகிறேன்..