வெள்ளி, 14 ஆகஸ்ட், 2009

பாவையாய்..


உன் கண்களில்
மணியாய் நானிருந்து....
உன் கண்மணியாய்
என்றும் நானிருப்பேன்,
பார்வையோடு சேர்ந்த
பாவையாய்....

விழிகளை பார்த்து


விழிகளை பார்த்து
இமைகள் சொன்னது....

"நான் என்றும் உன்னை அரவணைகின்றேன்
உன் பார்வை மட்டும் எங்கேயோ!"

விழிகள் சொன்னது...

என்னை பார்க்க செய்பவனும் நீதான்,
உறங்க செய்பவனும் நீதான்,
என் மீது தூசு படாமல் காப்பவனும் நீதான்,

உன் அன்பை எண்ணி
உனக்குள் உருளுவதும் உருகுவதும்
இந்த விழிகள் மட்டுமே.....

இமைகள் இமைக்க மறுத்தன....

வியாழன், 13 ஆகஸ்ட், 2009

நம்பிக்கை


முட்களின் பாதையில்
கண்ணாடி சிதறல்கள்!!
சிதறவில்லை மனம்,
முட்களில் ரோஜா தெரிகின்றது,
கண்ணாடியில் எதிர்காலம்
தெரிகின்றது...

புதன், 12 ஆகஸ்ட், 2009

துடிப்புகள்!


ஒரு முறை இணைந்தது இதயம்
பல முறை இணைந்தது துடிப்பு
துடிப்புகள் இல்லாமல்
இதயம் இல்லை....

பிரிவே!


உன் கோபம் கானல் என்று
எனக்கு தெரியும்,
என் மனம் நாணல் என்று
உனக்கு தெரியும்,
கல் மனம் கொண்ட பிரிவே!
பிரிக்க நினைத்தால்
நீயல்லவா உடைந்து போவாய்...

உன் கண்களை


உன் கண்களை மூடி பார்
அதில் கனவுகளாய் நானிருப்பேன்
உன் சிந்தனைகளை தேடி பார்
அதில் நினைவுகளாய் நானிருப்பேன்
உன் இதயத்தை திறந்து பார்
அதில் உயிராய் நானிருப்பேன்
இதில் நீ என்பது எதுவுமில்லை
உன்னுள் முழுமையாய் நானிருக்கின்றேன்
உன்னுள் இருக்கும் என்னை
சந்தோசமாய் வைத்திரு என்றும்...

வானம் மட்டும்

வானம் மட்டும் பொழியவில்லை
உன் விழிகளும்தான்
சிறிய ஊடல்கள் எல்லாம்
பெரிய இடைவெளியில் பரந்திட்டாலும்
இனி அந்த சண்டைகளையும் உன் கோபங்களையும்
நினைவுகளாக்கி பயணிக்கின்றேன்....

செவ்வாய், 11 ஆகஸ்ட், 2009

புரியும்


இடக்கண் துடிப்பதை
வலக்கண் அறியும்
என் இதயம் துடிப்பதை
உன் நட்பு மட்டும் புரியும்.

நீர்


நீர் தெளிந்ததால்
முகம் தெரிகிறது
நீ தெரிந்ததால் என்
அகம் தெரிகிறது.

மண்ணை


மண்ணை
சிலையாக்கியது சிற்பி
என் மனதை
கலையாக்கியது
உன் நட்பு....

என்னுள்


என்னுள்
உறைந்துவிட்ட
கவிதைகளை
உருகசெய்துவிட்டது
உன் நட்பு...

திங்கள், 10 ஆகஸ்ட், 2009

மனதின்


மனதின் கடிவாளத்தை
புத்தியின் கைகளில் வைத்துக்கொள்
ஏனெனில்
புத்திக்கு தோல்வியை தெரியும்
மனதிற்கு தெரியாது துவண்டுவிடும்.

வாழ்க்கை


உதயங்கள் சுடுவதில்லை
அஸ்தமனங்கள் அழிவதில்லை
இதில் வரும் வாழ்வு மட்டும் புரிவதில்லை
புதினங்கள் முடிச்சு இடும்
அதை உணர்ந்து அவிழ்பதுதான் வாழ்க்கை.

பாரதியார்

தமிழ் தேரின் சாரதி,
விடுதலை காண்டீபத்தின்
தமிழ் பிரம்மாஸ்திரம்.
தான் வளர்த்த மீசையினை
தமிழுக்கும் வளர்த்தவன்.
தலைப்பாகை கட்டி
தமிழ் பாவிற்கும், பாவைக்கும்
வீரம் வளர்த்த புரட்சி கவி....

பிம்பம்

உருவத்தின் பிம்பம் நிழல்கள்
உள்ளத்தின் பிம்பம் நினைவுகள்
உருவ பிம்பங்கள் மறைந்துவிடும்
உள்ளத்தின் பிம்பங்கள் மறைவதில்லை.