சனி, 8 ஆகஸ்ட், 2009

பிரிந்து

கடலை பிரிந்த அலைகள்,
மடலை பிரிந்த வரிகள்,
உடலை பிரிந்த உயிர்,
நிழலை பிரிந்த நிஜம்,
இருக்குமேயானால்!!
நானும் இருப்பேன்!
உன் நட்பை பிரிந்து..

விழித்திருக்கும்

புத்தி உறங்கி விழிக்கும்
மனம் உறக்கத்திலும்
விழித்திருக்கும்...

உறவாடும்

சோகமும் சுகமும் உன்னை
ஒட்டி உறவாடும்
கோபமும் தாபமும் உன்னை
வெட்டி உறவாடும்.

நிரந்திரம்

எதுவும் நிரந்திரமில்லாமல்
போவது ஓர்
நிரந்திரமே!

நட்பு

நட்பு என்பது
நம் வாழ்க்கை புத்தகத்தில்
இடையில் வந்த முதல் அத்தியாயம்
நம் வாழ்வின் அத்தியாயங்கள்
முடிந்தாலும்,
நட்பின் அத்தியாயங்கள்
என்றும் முடிவதில்லை.

தொழிலாளி

ஒரு தொழிலாளியின் வியர்வை
முதலாளியின் முதலீடுக்கு சமம்
தொழிலாளியின் கண்ணீர்
முதலாளியின் ரத்தத்திற்கு சமம்.

என்னுள்

என்னுள்...
அன்பை தேடினால்
அன்பு மிஞ்சும்,
குற்றம் தேடினால்
குற்றம் மிஞ்சும்.
அன்பு என் ஆழ்மனது
குற்றம் என் நொடிபொழுது.

வெள்ளி, 7 ஆகஸ்ட், 2009

சலசலப்பிலும்!

மாலை நேரம்,
ஆலமரத்தில் ஆயிரம் மைனாக்கள்
கூடின குலவின...
மனிதன் சளித்துகொண்டான்
ஒரே சப்தமென்று.
சிறிது நேரத்தில் ஒரே நிசப்தம், அமைதி..
மைனாக்கள் உறங்கின
மனிதனின் சலசலப்பிலும்....

இரவுகள்

இரவுகள் என்றும் இனிமையானது,
பூக்கள் கூட தன் கடைசி சுவாசத்தை
விசுவாசமாய் காட்டும் நேரமிது,
இனிய இரவு என்றும் அமைதிக்கு உறவு.

வியாழன், 6 ஆகஸ்ட், 2009

சாரல்

நீல வானத்தை வெண்மை
போர்வையாய் மேகம் மறைத்தது,
சாரல் தூவிட....
அணிந்துவிட்ட ஆடையோ!
மழையை அணியவா?
நனையவா? என விசும்பிட
நனைந்துவிட்டேன் மனதினில்..

உன்

கைகளுக்கு எட்டாத விசயங்களை
புத்தியால்தான்பெற முடியும்.
புத்திக்கு எட்டாத விசயங்களை
மனதால் மட்டுமே உணரமுடியும்.

விடியல்

மாற்றம் மிகுந்த உலகில்
ஏமாற்றம் இல்லாத விடியல்...

வெற்றியை

வெற்றியை விரல் நுனியில்
தாங்குபவனைவிட,
தோல்வியை இதயத்தில்
தாங்குபவனே மேலானவன்.

அந்தியே!

நிழலை நீளமாக்கி
நினைவுகளை ஆழமாக்கி
ஒளிதனில் ஓவியம் படைத்துவிட்டு
உறங்க செல்லும் அந்தியே!
உன் மனதின் வெளிச்சத்தை மட்டும்
உறங்க செய்துவிடாதே!

புதன், 5 ஆகஸ்ட், 2009

உன்னை

உன்னை விதித்தவனிடம் பக்தி கொள்,
உன்னை விதைத்தவனிடம் பாசம் கொள்,
உன்னை பறித்தவனிடம் நேசம் கொள்,
உன்னை புரிந்தவனிடம் நட்பு கொள்.

காதலும் நட்பும்

காதலும் நட்பும்
அன்பு எனும் அச்சில் செயல்படும்
கத்தரிகோல் போன்று
இருக்க வேண்டும். அவை
ஒன்றை ஒன்று வெட்டி கொள்ளாமல்
அதை கொச்சை படுத்துபவர்களை
வெட்டும்படி இருக்கவேண்டும்.

நட்பு

விரல்கள் சந்தித்தபோது
இதயம் நெருங்கவில்லை,
விடைகள் பெறும்போது
விரல்கள் விலகினாலும்
இதயம் விலகவில்லை...

நட்சத்திரங்கள்

வானில் மின்னிய நட்சத்திரங்களை
எண்ணி களைத்தேன்,
நட்சத்திரங்கள் கூறியது,
மின்னியதெல்லாம் எண்ணிவிட முடியாது
உன் வாழ்வில் நீ எண்ணியதெல்லாம்
மின்னிவிட முயற்சி செய் என்று...

செவ்வாய், 4 ஆகஸ்ட், 2009

நிழல்

நிழலுக்கு உண்மை நிஜம்
நிஜத்திற்கு பொய் நிழல்.
நிழல் நிஜமாகும்போது
பொய் மறைகின்றது.
நிஜம் நிழலாகும்போது
உண்மை மறைகின்றது.

என்றும்

அடிமைப்படுத்தாத அன்பும்
கட்டுப்படுத்தாத சுதந்திரமும்
என்றும் நிலைத்திருக்கும்.

உளிகள்

உளிகளை தாங்கிய
சிலைகள்தான் வடிவம் பெரும்,
அலைகளை தாங்கிய
கரைகள்தான் அழகு பெரும்,
வலிகளை தாங்கிய
உள்ளம்தான் வாழ்வு பெரும்.

எதிரியாய்

நல்ல விஷயங்களுக்கு

நண்பனாய் இருப்பதைவிட

கெட்ட விஷயங்களுக்கு

எதிரியாய் இருப்பதே மேல்.

மனிதன்

மனிதன் உறங்கும்போது
கனவுகளில் விழிதிருக்கின்றான்,
விழித்திருக்கும்போது
நினைவுகளில் உறங்குகின்றான்.

நேற்றைய சோகங்களில்
இன்றைய நிமிடங்களை கரைப்பது
நாளைய வாழ்வை தொலைப்பதாகும்.

பிரிவதில்லை

அன்பு நெஞ்சங்கள்
அருகில் இருந்தால் என்ன?
தொலைவில் இருந்தால் என்ன?
உண்மையான அன்பும் நட்பும்,
என்றும் பிரிவதில்லை...