வெள்ளி, 28 ஆகஸ்ட், 2009

மனம்


சில சம்பவங்கள்
மனதை ஆள நினைக்கும்,
சில சம்பவங்களில் இருந்து
மனம் மீள நினைக்கும்.
சம்பவங்கள் எல்லாம்
சந்தர்பத்தின் தூண்டில்களே!
அதில் புழுவாய் துடிப்பது
மனம் மட்டுமே!..

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2009

உனக்காக


உனக்காக நீ வாழ வேண்டாம்,
வாழ நினை அது போதும்
அதுதான் உன் உறவு முடிச்சுகளை
வலிக்காமல் அவிழ்க்க உதவும்.

எதிர்காலம்


எதிர்காலம் என்பது
விளக்கின் வெளிச்சம்
கண்களுக்கு தெரியும்வரைதான்.
மேலும் தெரிய முடியுமென்றால்
அது உன் அகத்தின் விளக்கால்
இந்த உலகத்தின் பொருளை உணர்ந்து
பார்த்தால் மட்டுமே தெரியமுடியும்.