வெள்ளி, 11 செப்டம்பர், 2009

பெண்

இருண்ட வானில்
இரட்டை விண்மீனாய் படத்த விழிகள்,
கனத்த மேகமாய் இமைகளின சாமரம்.
குளிர்ந்த காற்றினையும் அனலாக்கிய சுவாசம்,
நிலைப்படுத்த முயன்றும்
தோற்றுப்போன மனதாய் பிசைந்தது.
மின்னல் கீற்றாய் சிதறிய பிளவில்,
மீண்டும் பிறப்பதன் முன்னோட்டமாய் ரணம்.
விழிகளை சொருகி அணைத்த
இமைகளின் கால்களில் உதிர்ந்த
இரு துளிகளில் வடிந்திடும் வலிகள்...

செவ்வாய், 8 செப்டம்பர், 2009

உழைத்து உண்


சுற்றும் உலகில் சற்றும் எதிர்பாரா
சம்பவங்கள் எத்தனை! எத்தனை
வியர்வை சிந்தி உழைத்தவர்கள் செல்வதை
வித்தாய் சிந்தி களைத்தவர்கள் எத்தனை!

ஓவியம் காணா மாளிகைகளையும்
காவியம் காணா கோபுரங்களையும்
மல்லிகை மஞ்சத்தில் தொலைத்தவர்கள் எத்தனை!

குருதி அறுதியிட்டு கூறமுடியாத வாரிசுயின்றி
மாறிய செல்வங்கள் எத்தனை!

நம்பிக்கையின் புள்ளிகளுக்கு சூழ்நிலை
கோலமிட்டு ஏமாறிய செல்வங்கள் எத்தனை!

புத்தியின் கூர்மையால் வந்த செல்வங்கள் எல்லாம்
கத்தியின் கூர்மைக்கு பலி ஆனவை எத்தனை!

உலகில் உழைப்பவர்கள் சிலரே,
வாலிபம் சேர்த்ததை
வயோதிகம் தின்பதில்லை.

உலக இளைஞர்களே!
நீங்கள் உண்ணும் உணவில்
உழைப்பின் அளவு
உப்பின் அளவாது இருக்கட்டும்.
உழைத்து உண்.
மற்றவர்களை இழைத்து உண்ணாதே!
கடலளவு உழைப்பவர்கள் முன்
நீ உன் உடலளவு உழைத்திடு.
அதில் திளைத்திடு ஆனந்தமாய்...

திங்கள், 7 செப்டம்பர், 2009

விழிகள்


இமைக்குள் உறங்குவதும் நீதான்,
இமயமாய் துன்பம் வரும்போது
இமைக்குள் உருகுவதும் நீதான்..

பெண்மையின் உள்ளம்


பெண்மையின் உள்ளம்
கடலைவிட ஆழமானது
என்பதைவிட
கற்ப கிரகத்தைவிட புனிதமானது
என்பதுதான் உண்மை.
அந்த புனிதத்தை
உணர்ந்துவிட்டால்
உன்னில் பாதி பெண்மை
என்பதை விடுத்து
பெண்மையின் மீதிதான் நீ
என்பதை உணர்ந்திடுவாய்...