வெள்ளி, 11 செப்டம்பர், 2009

பெண்

இருண்ட வானில்
இரட்டை விண்மீனாய் படத்த விழிகள்,
கனத்த மேகமாய் இமைகளின சாமரம்.
குளிர்ந்த காற்றினையும் அனலாக்கிய சுவாசம்,
நிலைப்படுத்த முயன்றும்
தோற்றுப்போன மனதாய் பிசைந்தது.
மின்னல் கீற்றாய் சிதறிய பிளவில்,
மீண்டும் பிறப்பதன் முன்னோட்டமாய் ரணம்.
விழிகளை சொருகி அணைத்த
இமைகளின் கால்களில் உதிர்ந்த
இரு துளிகளில் வடிந்திடும் வலிகள்...

2 கருத்துகள்:

ஹேமா சொன்னது…

//இமைகளின் கால்களில் உதிர்ந்த
இரு துளிகளில் வடிந்திடும் வலிகள்...//

சங்கர் பெண் - உங்கள் கருத்து...!

சங்கர் சொல் சரிபார்ப்பு என்பதை நீக்கிவிடுங்கள்.பின்னூட்டம் இட சலிப்புத் தராது.

சந்தான சங்கர் சொன்னது…

ஹேமா,
கருத்தை சொல்லமுடியாமல் இருக்கின்றேன்!
சில சொல்லமுடியாத வேதனைகளின்
உருவகம்தான் பெண்
மீண்டும் வாசியுங்கள் உங்களுக்கு
புரியாமல் யாருக்கும் புரியப்போவதில்லை.