வெள்ளி, 24 ஜூலை, 2009

நிலவே!


ஆயிரம் விளக்குகள்
மின்னி மறைந்தாலும்
உன் புன்னகை மட்டுமே!
நிரந்திர ஒளி என நம்பிக்கையில்
உறங்குகின்றேன்.

நிலவே!


நீ தேய்பிறை என்றாலும்,
வளர்பிறை என்றாலும்,
நீ எனக்கு பிழை இல்லையடி..

புதன், 22 ஜூலை, 2009

அன்பு

நான் என்னை புரிந்து
கொண்டேன்,
இவ்வுலகம் தன்னை
புரிந்து கொள்ளட்டும்.

அன்பு ஆழமானது,
அது மூழ்கியவர்களுக்கு மட்டும்தான்
கிடைக்கும்.

நான் அன்பாய் இருக்கின்றேன்
எனக்குள் நான் மூழ்கியதால்.....

பெண்மை!

பெண்மையே!
உண்மையில் நீ
மேன்மையே!

உலகத்தின் கடிவாளம் நீ,
நீ இல்லையென்றல் உலகம்
தறி கெட்டுவிடும்.

அன்பின் வடிவமும் பெண்மை,
வாழ்வும் பெண்மை.

நீ இல்லையென்றல் இவ்வுலகிற்கு
இன்மையும் இல்லை மறுமையும் இல்லை.

வாழ்க்கை

வாழ்க்கை என்பது ஒருவரிடம்
பெறுவதும் இல்லை,
கொடுப்பதும் இல்லை.

நான் நானாகவே இருகின்றேன்,
நீ நீயாகவே இரு.

உனக்காக என்னை மாற்றி கொள்ளவில்லை,
எனக்காக உன்னை மாற்றி கொள்ளவேண்டாம்.

இதில் "நான்" என்பதை மட்டும் "நாம்"
என்று யோசிப்போம்.
அதில்தான் அன்பும் வாழ்வும் கலந்து இருகின்றது.

செவ்வாய், 21 ஜூலை, 2009

நட்பு


மழையில் நனைந்த நான்
உலர்ந்துவிட்டேன்,
உன் நட்பில் நனைந்த உள்ளம் மட்டும்
என்றும் ஈரமாய்....

உன்னிடம்

உன்னிடம் பிடித்தது பல,
பிடிக்காதது சில,
பிடித்ததை சொல்லும்போது
பிடிக்காததை மறந்து விடுகிறேன்.

நட்பு

அன்பில் நட்பு கலந்து
இருக்கவேண்டும்,

நட்பில் அன்பு நிறைந்து
இருக்கவேண்டும்,

உன் நட்பில் நான்
நிறைந்து இருக்கின்றேன்.

ஞாயிறு, 19 ஜூலை, 2009

நீ

ஆழமான மனதில் நீ மட்டும்

மிதப்பது ஏன்?!

மூழ்கி விட்டேன்

நீ (நீர்) இல்லாமலேயே!!