புதன், 15 ஜூலை, 2009

நட்பே!


நட்பிற்கு ஆயிரம் கவிதைகள் எழுதினேன்,

உன் முன்னால் வார்த்தைகளற்று போனேன்,
நட்பாகவே! நீ பிறந்ததால்..


காகிதம்கூட கப்பலாகி கரை சேரும்,

உன்னைப்போல் நட்பு கிடைத்தால்.....

இன்று நான்

எல்லோருக்கும் வெளிச்சமாய்

நான் இருந்தேன்,

இன்று என் நிழல்கூட எனக்கு சொந்தமில்லை.என்றும் மெழுகுவர்த்தி.....

இன்று நான்........

செவ்வாய், 14 ஜூலை, 2009

நினைவுகள்.


கண்ணாடி பிம்பங்கள்,
கலையாத நினைவுகள்,
நிலையான பந்தங்கள்,
ஆகிவிடாதா?