சனி, 22 ஆகஸ்ட், 2009

இயற்கை


மழையில் நனைந்த மழலைகள் போல
காலை சோலை...
ஆதவ ஒளி தலை துவட்டியது
மஞ்சலாடையில்
பூமித்தாயின் பச்சையாடையில்
வண்ண கோலங்களாய் சோலைப்பூக்கள்..
தென்றல் நாணலை வருடிட
கழுத்துவரை ஸ்நானம் செய்திடும் நெல்மணிகள்..
சிட்டுக்கள் மெட்டு பாடிட,
குயிலினம் குரல்வளம் காட்டியது.
மயிலினம் தோகை விரித்திட,
தென்றல் வேகம் காட்டிட,
தென்னை தன்னை மறந்து
விண்ணை அளந்து,
மேக கருக்கலில் சாரல் தூவியது,
இயற்கையின் இளமை காத்திட...

வானம்நீலத்தில் மிஞ்சிய மேகங்கள் போய்
மேகத்தில் மிஞ்சிய நீலமாய் வானம் இன்று.
ஆதவ பார்வையில் வியர்வை முத்துக்கள்,
ஆடிடும் தென்றலில் சாரல் முத்துக்கள்.
நிலம் பெரும் துளிகளெல்லாம்
வளம் பெரும் வாழ்விற்கே!

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2009

அந்தியே!


நிழலை நீளமாக்கி
நினைவுகளை ஆழமாக்கி
ஒளிதனில் ஓவியம் படைத்துவிட்டு
உறங்க செல்லும் அந்தியே!
உன் மனதின் வெளிச்சத்தை மட்டும்
உறங்கச் செய்து விடாதே!

வெற்றியை..


வெற்றியை விரல்நுனியில்
தாங்குபவனைவிட
தோல்வியை இதயத்தில்
தாங்குபவனே மேலானவன்.

புதன், 19 ஆகஸ்ட், 2009

ஆழமாக..


ஆழமாக சிந்தித்தால்தான்
உயரமாக செல்லமுடியும்.
அன்பாக இருந்தால்தான்
அதை வெளிப்படுத்தமுடியும்.
நான் என்ற சொல்லில்தான்
தான் என்ற கர்வம் உள்ளது.
நாளை என்பது இறப்பதில்லை
இன்று அது பிறப்பதில்லை.
பொய்யான காட்சிகளைகூட
உண்மையாக படம் பிடிப்பவைதான் கண்கள்.
நான் அன்பாய் பார்ப்பதால்தான்
நீ அழகாய் இருக்கின்றாய்....

பெண்மையின் ஒளி!


ஆதவ வெளிச்சம் புற கண்களுக்கு
மட்டுமே பரிச்சயம்...
அன்பின் வெளிச்சத்தை
அக கண்களால் ஈந்து
ஆண்மையின் வேகத்தை
அன்பின் விவேகமாக்கி
வாழ வைத்திடும்
பெண்மையின் ஒளி மட்டுமே!
இவ்வுலகை நிரந்திர ஒளியில்
வாழ வைத்திடும் என்றென்றும்..

திங்கள், 17 ஆகஸ்ட், 2009

கண்ணீராக


நான் உன்..
கண்ணீராக இருந்தால்!
உன் கன்னத்தில் விழுந்து
இதழில் மடிவேன்...!!

வண்ணத்துப்பூச்சியாய்..


சிற்றின்ப தீயில் வெந்திடும்
விட்டில் பூச்சியாய் இருப்பதைவிட
பேரின்ப வானில் சிறகடிக்கும்
வண்ணத்துப்பூச்சியாய் இருந்துவிடு..

என்னுள்..


என்னுள் சிந்திக்க
தெரிந்த எனக்கு
எனக்காக சிந்திக்க
தெரியவில்லை..!!

மிருகம்


தவறுக்கு அஞ்சுபவன்
மனிதன்..
தவறையே அஞ்சும்படி
செய்பவன் மிருகம்..

மௌனமாய்


தனிமையாய்...
இருப்பதைவிட
மௌனமாய்...
இருப்பதே மேல்!!