சனி, 22 ஆகஸ்ட், 2009

இயற்கை


மழையில் நனைந்த மழலைகள் போல
காலை சோலை...
ஆதவ ஒளி தலை துவட்டியது
மஞ்சலாடையில்
பூமித்தாயின் பச்சையாடையில்
வண்ண கோலங்களாய் சோலைப்பூக்கள்..
தென்றல் நாணலை வருடிட
கழுத்துவரை ஸ்நானம் செய்திடும் நெல்மணிகள்..
சிட்டுக்கள் மெட்டு பாடிட,
குயிலினம் குரல்வளம் காட்டியது.
மயிலினம் தோகை விரித்திட,
தென்றல் வேகம் காட்டிட,
தென்னை தன்னை மறந்து
விண்ணை அளந்து,
மேக கருக்கலில் சாரல் தூவியது,
இயற்கையின் இளமை காத்திட...

கருத்துகள் இல்லை: