சனி, 1 ஆகஸ்ட், 2009

உன் வாசம்

இந்த உலகம்
விளிக்கும்முன் மலர்ந்து
உறங்கும்முன் உதிர்ந்து
உன் சுவாசம் மறைந்தாலும்
உன் வாசம் மறைவதில்லை...பூக்கள்.

உளிகள்

தோல்வி என்ற உளிகள்தான்
உன்னை வெற்றியாய் செதுகுகின்றது.

வெள்ளி, 31 ஜூலை, 2009

உப்பு


கண்ணீர் சிந்தவில்லை,
வியர்வை சிந்தவில்லை,
வாழ்வே! உப்பானது மீன்களுக்கு.

கண்ணீர் சிந்தினான்,
வியர்வை சிந்தினான்,
உப்பே! வாழ்வானது மனிதனுக்கு.

காதல்

ஒரு உள்ளம்
ஒரு உள்ளத்திடம்
தோல்வி அடையும்போது
அதன் உணர்வுகள்
வெற்றி அடைகின்றது.

மனசு

அறிவுக்கும் மனசுக்கும் சிக்கல்
இருக்கும்போது நீ மனசு
சொல்வதை மட்டும் கேள்,
அறிவை கேட்காதே! ஏனென்றால்
அறிவுக்கு அனைத்தும் தெரியும்
மனசுக்கு உன்னை மட்டுமே தெரியும்.

உன்னைப்போல்

எல்லோரும் உன்னைப்போல்
இருக்க வேண்டும் என்றால்
உன் அறிவுதான் இந்த உலகத்தின்
அறிவாக இருக்கமுடியும்.

மனிதன்

எல்லோருக்கும் பகைவனாக
இருக்க முடியாது,
எல்லோருக்கும் நண்பனாகவும்
இருக்க முடியாது, ஆனால்
எல்லோருக்கும் மனிதனாக
இருக்க முடியும்.