சனி, 5 செப்டம்பர், 2009

பெண்மை


விழிதனில் மொழி படைத்து,
மொழிதனில் காதல் படைத்து,
காதலில் காவியம் படைத்து,
இவ்வுலகை சிருஸ்டித்து நம்
உணர்வை சிருஸ்டித்து,
மழலையில் உறங்கசெய்து,
மாலையில் மயங்கசெய்து,
பாறை நெஞ்சங்களிலும்
பாசம் பூக்க செய்து,
உன் வாழ்வினில் நகமும் அகமுமாய்
வாழ்ந்திடும் பெண்மை எனும்
பிரம்மம் போற்றிடு...

வெள்ளி, 4 செப்டம்பர், 2009

துளிகளே!


விழிகளை பிரிந்த துளிகளே!
உன் வலிகளை புரிந்த
வார்த்தைகள் இவை.
பார்வை மட்டுமே உலகம் என்ற விழிகளுக்கு
பாதை காட்டிட பிறந்தாயோ!
இதயத்தின் ஆனந்தத்திலும் பொங்கினாய்,
ஆழத்திலும் பொங்கினாய்.
உப்பு கடலில் முத்தை படைத்தவன்தான்,
உள்ள கடலில் உன்னையும் படைத்தான்.
இதயம் வார்த்தைகளற்று போகும்போது
இதழ்களுக்காக பேச பிறந்தாயோ!
அகத்தின் பக்கத்தில்
அன்பின் சுவடுகள் கண்டவர்களுக்கு,
முகத்தின் பக்கத்தில்
உப்புசுவடுகள் நீ.
விண்ணை பிரியும் மழை நீர்தான்
மண்ணை புரியும்,
உன்னை பிரியும் கண்ணீர்தான்
என்னை புரியும்.

புதன், 2 செப்டம்பர், 2009


புருவ வில் வளைத்து,
பார்வை அம்புகள் தொடுக்கும் விழிகளை,
எத்தனை முறை அடித்தாலும் கேட்பதில்லையே!


இமைகள்....

இதயம்


நீ
வெளிச்சமாக வாழத்தான்
இதயம் கூட
இருளில் துடிக்கின்றது.

செவ்வாய், 1 செப்டம்பர், 2009


எல்லோருக்கும்
உலகம் ஒன்றுதான்,
எனக்கு மட்டும் அது
இரண்டாய் தெரிகின்றது!


உன் விழிகளில்....

பூ


பெண்மை என்னும் "பூ
இன்னும் பூத்துகொண்டு
இருப்பதால்தான்,
உலகம் அன்பின் வாசத்தில்
வாழ்ந்துகொண்டு இருக்கின்றது.

உலகம்


சுருக்கமாக சொன்னால்
உலகம் விரிவானது,
விரிவாக சொன்னால்
உலகத்தின் சுருக்கங்கள்தான் அதிகம்.

திங்கள், 31 ஆகஸ்ட், 2009

அன்பு


அன்பை எடுப்பவன்
ஆயுதத்தைவிட
கூர்மையானவன்

ஆயுதத்தை எடுப்பவன்
அன்பினால்
கூர்மை ஆக்கப்படாதவன்.

உன்


உன் வலிகளை செதுக்கிடும்
உளிகள்தான் என் வார்த்தைகள்..