வெள்ளி, 16 அக்டோபர், 2009

கனவு(கள்)


விளக்கொளியும் பிறையென
சிறுத்த இரவு..

சிணுங்கி சிணுங்கி
மறுதலித்தாள்,
மருதவிப்போடு..

குளிரின் படிமம்
தளிரில் படிந்திடாது
விரட்டிய வேட்கையின்
வெம்மமூச்சு..

நினைந்து நினைந்து
இணைந்த கணங்களில்
கலைந்து வெடித்த
கனவு(கள்)...

புதன், 14 அக்டோபர், 2009

கலைந்த கரு


போக்குவரத்து நிறுத்தம்..
தலைப்பு செய்தி:
குழந்தை தொழிலாளர்கள் தடை
சட்டம் நாடு முழுவதும்
நடைமுறை படுத்தப்பட்டு இருக்கின்றது
மத்திய மந்திரி பேட்டி

....கூவி .... கூவி செய்தித்தாள்
விற்றுக்கொண்டிருந்தான்
எட்டு வயது சிறுவன்.

கருக்கலைப்பு சட்டம்
அமலாக்கப்பட்டு ஐம்பது வருடங்கள்
நிறைவு விழா..
உணவு இடைவேளையில்
கலைக்கப்பட்டு பரிமாறப்பட்ட
இரட்டை கரு முட்டைகள்..

கலைக்கப்பட்ட கருவைபோல்
கலைந்துவிட்ட பள்ளிக்கனவுகள்..

ஞாயிறு, 11 அக்டோபர், 2009

தேவதையின் வரம்!



ஈழத்தின்
ஈனங்கள்..

ராவணன் எல்லாம்
ராணுவனாய்.. தேசத்து
சீதைகளுக்கெல்லாம்
சிதையிட்ட கேவலம்
மரித்த நாயினும் கேடாய்..
புத்த பூமியில்
மொத்த அவலமாய்..

இலங்கமும்
கலிங்கமாய்
கலங்கியதேன் ஒண்டும்
விளங்கல்ல..

ஈழத்தின்
ஈன குரல்களுக்கு செவி
சாய்க்காமல்
சாய்ந்துவிட்ட அந்தியே!
மீண்டும்
முகடேறி
முறை செய்ய வந்ததேன்?
இழவு நாட்டில்
எத்தனை சிதைகள் என்று
உளவு பார்க்க வந்தாயா?
விடியல் என்ற போர்வையில்
விடியாத பூமிக்கு..

உலகெல்லாம் என் பந்தம்
என் தேசத்தில் மட்டும்
ஏன் தீப்பந்தம்?
சமூகம் எமக்களித்த
போர்பந்தமா?

இனமெல்லாம் தனலிட்டபின்
மணலிட்ட உரம்தானே! இனி
வரமிட்டு வாழ்வது யாரிங்கே?
வரமென்று வேண்டாம்
கரமொன்று நீட்டுங்கள்
கையாலாகாத பூமியில்
கையளவாது ஈரம் மிஞ்சட்டும்...



ஊக்கமும்
ஆக்கமும்
ப.ரா , ஹேமா