புதன், 14 அக்டோபர், 2009

கலைந்த கரு


போக்குவரத்து நிறுத்தம்..
தலைப்பு செய்தி:
குழந்தை தொழிலாளர்கள் தடை
சட்டம் நாடு முழுவதும்
நடைமுறை படுத்தப்பட்டு இருக்கின்றது
மத்திய மந்திரி பேட்டி

....கூவி .... கூவி செய்தித்தாள்
விற்றுக்கொண்டிருந்தான்
எட்டு வயது சிறுவன்.

கருக்கலைப்பு சட்டம்
அமலாக்கப்பட்டு ஐம்பது வருடங்கள்
நிறைவு விழா..
உணவு இடைவேளையில்
கலைக்கப்பட்டு பரிமாறப்பட்ட
இரட்டை கரு முட்டைகள்..

கலைக்கப்பட்ட கருவைபோல்
கலைந்துவிட்ட பள்ளிக்கனவுகள்..

3 கருத்துகள்:

விஜய் சொன்னது…

கலைந்து போன பள்ளி கனவுகள்

சமூக பார்வையின் தாக்கம் அதிகமாகிறது சங்கர்.

வாழ்த்துக்கள்.

எனது புதிய பதிவை பார்த்தீர்கள?

விஜய்

சந்தான சங்கர் சொன்னது…

நன்றி விஜய்..

ஹேமா சொன்னது…

சொல்லியிருக்கும் இரண்டு விஷயமுமே கவலைக்குரியது சங்கர்.