செவ்வாய், 8 செப்டம்பர், 2009

உழைத்து உண்


சுற்றும் உலகில் சற்றும் எதிர்பாரா
சம்பவங்கள் எத்தனை! எத்தனை
வியர்வை சிந்தி உழைத்தவர்கள் செல்வதை
வித்தாய் சிந்தி களைத்தவர்கள் எத்தனை!

ஓவியம் காணா மாளிகைகளையும்
காவியம் காணா கோபுரங்களையும்
மல்லிகை மஞ்சத்தில் தொலைத்தவர்கள் எத்தனை!

குருதி அறுதியிட்டு கூறமுடியாத வாரிசுயின்றி
மாறிய செல்வங்கள் எத்தனை!

நம்பிக்கையின் புள்ளிகளுக்கு சூழ்நிலை
கோலமிட்டு ஏமாறிய செல்வங்கள் எத்தனை!

புத்தியின் கூர்மையால் வந்த செல்வங்கள் எல்லாம்
கத்தியின் கூர்மைக்கு பலி ஆனவை எத்தனை!

உலகில் உழைப்பவர்கள் சிலரே,
வாலிபம் சேர்த்ததை
வயோதிகம் தின்பதில்லை.

உலக இளைஞர்களே!
நீங்கள் உண்ணும் உணவில்
உழைப்பின் அளவு
உப்பின் அளவாது இருக்கட்டும்.
உழைத்து உண்.
மற்றவர்களை இழைத்து உண்ணாதே!
கடலளவு உழைப்பவர்கள் முன்
நீ உன் உடலளவு உழைத்திடு.
அதில் திளைத்திடு ஆனந்தமாய்...

3 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

கவிதை நல்லா இருக்கு..நிறைய விசயம் சொல்லியிருக்கீங்க :-)

thiyaa சொன்னது…

நல்ல கவிதை

சந்தான சங்கர் சொன்னது…

புனிதா

வாழ்த்துக்கு மிக்க நன்றி.

தியாவின் பேனா..

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி..