புதன், 30 செப்டம்பர், 2009

ஜனனம்..முகிலின் மரணம்
மழையின் ஜனனம்,

விதையின் மரணம்
துளிரின் ஜனனம்,

பூக்களின் மரணம்
வாசனையின் ஜனனம்,ஞாயிறின் மரணம்
திங்களின் ஜனனம்.

இயற்கையின் எல்லா மரணங்களும் ஓர்
புனித ஜனனத்தை படைத்துவிட்டுதான் செல்கிறது.

மானிட பிறவியில் மட்டும் ஏன் மரணம்
ஓர் இறுதியாக மட்டுமே கணிக்கப்படுகிறது?மானிட பிறவியிலும் மரணத்தில் ஓர்
ஜனனம் இருக்கின்றது,

அதுதான்...

பெண்மையின் மரணம்
தாய்மையின் ஜனனம்...

6 கருத்துகள்:

விஜய் சொன்னது…

தோல்வியின் மரணம்
வெற்றியில் ஜனனம்

சங்கர், உங்களது கவிதை தேடலுக்கு வாழ்த்துக்கள்.

இரசிகை சொன்னது…

!

சந்தான சங்கர் சொன்னது…

விஜய்
உங்கள் அன்பிற்கும் வாழ்த்துக்கும்
மிக்க நன்றி..

இரசிகை.
உங்கள் குறியீடு
சிறியது அதன் மதிப்பு பெரியது.
மிக்க நன்றி..

Admin சொன்னது…

நல்ல வரிகள் இரசித்தேன்

ஹேமா சொன்னது…

ஜனனத்தைத் திரும்பவும் ஞாபகப் படுத்தியிருக்கிறீர்கள்.உங்களைப் போல என்னால் கவிதையாய் பின்னூட்டம் போட வருகுதில்லை.பெண் என்றுமே நொடிக்கு நொடி செத்துப் பிறக்கும் ஜென்மம்தான் சங்கர்!

சந்தான சங்கர் சொன்னது…

மீண்டும் ஹேமா..

முடிவிலியே வருக.