வெள்ளி, 7 ஜனவரி, 2011

கரு-உரு

உரு பார்த்து கரு 
தொலைத்தேன்..
கரு பார்த்து கரு
வளர்த்தேன்..

கருவின் உருவத்தில் 
உருவில் கரு இல்லை 
உருவின் தோற்றத்தில் 
கருவின் கரு இல்லை.

கருவின் கண்ணே!
உருவானபின்,
புறக்கண்ணும் அறியுமோ!
அகக்கருவை..?!!   


கருவில் உரு இல்லை 
உருவில் கருவே எல்லை...

6 கருத்துகள்:

விஜய் சொன்னது…

கருவின் உரு நன்று

வாழ்த்துக்கள்

விஜய்

ஹேமா சொன்னது…

கருவும் உருவும் கவிதையின் கருவாகி உருவாகிய விதம் அற்புதம் !

சந்தான சங்கர் சொன்னது…

விஜய்

நன்றி நண்பா தொடர்ந்து
எழுத முயற்சிக்கிறேன்.

ஹேமா

நன்றி தோழி. தமிழ் மணத்தில் வெற்றி
பெற வாழ்த்துக்கள்.

சத்ரியன் சொன்னது…

சந்தானசங்கர்,

நெடு நாட்களாய் காணவில்லை. என்னாச்சி.? கவிதையிலும் எதோ வருத்தம் நிறைந்திருக்கிற மாதிரி ....!

புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பா.

kanmani சொன்னது…

A wonderful thinking! Fantastic..continue the art of a poem. thank uuu...

கா.வீரா சொன்னது…

கருவும் உருவும்
இங்கே கரு

எல்லா கருவும்
உரு வாகாது ...

ஆனால் எல்லா உருவும்
கருவாகும் ..