பெண்மையே!
உன்னை புரிந்து புரிந்து
பிரிகிறேன் பிரியமுடியாமல்,
உயிர் கொடுத்து உயிர் எடுக்கும்
உன் பிரம்மம் ஓர் சூத்திரமே..
அணையக் கிடைத்ததில் எல்லாம்
அடை காக்கவில்லை,
இணையக் கிடைத்ததில் விடை தராமல்
விடை பெரும் அம்புகளாய் எத்தனை கோடி..
உடலும் கடலென மூழ்கிய முத்துக்களில்
என்னை மட்டும் தத்தெடுக்கும் அன்னை சிற்பியே!
தன்னை அறியா தளிரும் உன்னை அறியும்..
என்னை அறிந்து புரியக் கிடைத்த பிரியம்
உலகில் நீயல்லவா பெண்மையே!..
8 கருத்துகள்:
அழகான, அருமையான கவிதை...
வாழ்த்துக்கள்..
கவிதை அருமை! வாழ்த்துக்கள்..!
தன்னை அறியா தளிரும் உன்னை அறியும்..
என்னை அறிந்து புரியக் கிடைத்த பிரியம்
உலகில் நீயல்லவா பெண்மையே!..
idhu yeppati nanba... iththanai arumaiyana varthaikal..padippavarin manathirkku yeatra varigalaai.. azhagu.. vazhlthukkal nanba...
அருமையான கவிதை.வாழ்த்துக்கள்.
பெண்ணாய்ப் பிறந்த சந்தோஷம் என்றாலும்...இன்னும் விடுபடாத விலங்குகளின் நுனி ஆண்கள் கைகளில் !
அருமை நண்பா
படம் அழகு
வாழ்த்துக்கள்
விஜய்
அருமையான கவிதை.வாழ்த்துக்கள்...
தன்னை அறியா தளிரும் உன்னை அறியும்..
என்னை அறிந்து புரியக் கிடைத்த பிரியம்
உலகில் நீயல்லவா பெண்மையே
மிக அருமையான கவிதை தாய் என்றுமே அதிசயப்பிறவி உலகத்தின் எட்டாவது அதிசயம்
நன்றி
ஜேகே
கருத்துரையிடுக