சனி, 24 அக்டோபர், 2009

சில சிந்தனைகள்


எல்லோரும் உன்னைப்போல்
இருக்கவேண்டும் என நீ நினைத்தால்
உன் அறிவுதான் இந்த
உலகத்தின் அறிவாக இருக்கும்..

உன்னை கடந்துவிட்ட துன்பங்களுக்கும்
உன்னால் நடந்துவிட்ட துன்பங்களுக்கும்
இடையே உள்ள வேறுபாட்டில்தான்
உன் வாழ்வின் இன்பக் கணக்கு எழுதப்படுகிறது..

சப்தங்களை நிறுத்தாதவரை
உன்னால் அமைதியை உணரமுடியாது,
எண்ணங்களை நிறுத்தாதவரை
உன்னால் தெளிவாக சிந்திக்கமுடியாது..

அறிவுக்கும் மனசுக்கும் சிக்கல்
இருக்கும்போது நீ மனசு சொல்வதை
மட்டும் கேள்! அறிவை கேட்காதே!
அறிவுக்கு அனைத்தையும் தெரியும்
மனசுக்கு உன்னை மட்டுமே தெரியும்.

நீ புரிந்துகொண்ட விசயங்களை
தெரிந்து கொள்ள நினைக்காதே!
நீ தெரிந்து கொண்ட விசயங்களை
புரிந்து கொள்ளாமல் இருக்காதே!

நல்லதை அறிந்துகொள்!
தீயதை தெரிந்துகொள்!

8 கருத்துகள்:

சத்ரியன் சொன்னது…

//எல்லோரும் உன்னைப்போல்
இருக்கவேண்டும் என நீ நினைத்தால்
உன் அறிவுதான் இந்த
உலகத்தின் அறிவாக இருக்கும்..//

ச.சங்கர்,

இந்த அடிப்படை விசயம் தான், பலருக்கும் பிரச்சினையே.

ம்ம்ம்ம்ம்ம்ம்.... நல்லாயிருக்கு.

(ஐய்யா யோகா செய்வாரு போலிருக்கே?!)

க.பாலாசி சொன்னது…

//சப்தங்களை நிறுத்தாதவரை
உன்னால் அமைதியை உணரமுடியாது

அறிவுக்கு அனைத்தையும் தெரியும்
மனசுக்கு உன்னை மட்டுமே தெரியும்.

நீ தெரிந்து கொண்ட விசயங்களை
புரிந்து கொள்ளாமல் இருக்காதே!//

எல்லா சிந்தனையுமே ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான் அன்பரே...

கடைசியா சொன்னீங்களே...அது நச்....

விஜய் சொன்னது…

கவிதை அறிவுரை

வாழ்த்துக்கள்

விஜய்

சந்தான சங்கர் சொன்னது…

சத்ரியன்

உங்கள் முதல் வருகைக்கு
மிக்க நன்றி..
யோக கிகா எல்லாம் இல்லை.
மனசுல வருது வார்த்தைகள் சொல்லுது.
அவ்வளவே...

க.பாலாசி

வாங்க பாலாசி
கூப்பிட்ட குரலுக்கு
குறையில்லாமல் வந்துவிட்டீர்கள்
நிரம்ப மகிழ்ச்சி..
தொடர்ந்து சந்திப்போம்

விஜய்
உங்க யுகபொருமைக்கு பின்னோட்டமிட்டுத்தான்
பொறுமையாய் இந்த பதில்..
பேசுவோம் அலைபேசியில் விரைவில்
உங்களை அழைக்கின்றேன்..

velji சொன்னது…

அருமை நண்பரே.
நம்மை போலவே பிறரும் இருக்க வேண்டும் என நினைப்பதும்,இருந்தால் ஒட்டிக்கொள்வதும் மனதின் இயல்பு.
உலகம் வளரட்டும் என தலையில் தட்டி சொல்வது போல் இருக்கிறது முதல் துளி.

ஹேமா சொன்னது…

சங்கர்,கடைசியா சொல்லியிருக்கீங்க அருமையா.எத்தனையோ விஷயங்கள் தெரிந்து கொண்டாலும் தெளிவில்லாமல் இருந்தால் பயனே இல்லை.அழிவுதான் அதிகம்.நல்ல சிந்தனைக் கவிதை.

சந்தான சங்கர் சொன்னது…

வேல்ஜி
வருகைக்கும் அன்பிற்கும்
மிக்க நன்றி வேல்ஜி.
தொடர்ந்து சந்திப்போம்

ஹேமா
நன்றி ஹேமா, உங்கள் வேலை பளுவிலும்
தவறாது வந்துவிடுகிறீர்கள்
பதிப்பு இடுவதைவிட பின்னோட்டமிடுவது
கடினம்தான்.

இரசிகை சொன்னது…

simply supreb.......