சனி, 14 நவம்பர், 2009

சிந்தனை துளிகள்மௌனம் சம்மதத்திற்கு பொருந்தும்
சங்கடங்களுக்கு பொருந்தாது
சங்கடத்தின் மௌனம் உன்னை
சப்தமாக கொன்றுவிடும்.

தியாகத்தில் திரியாய்
தீபத்தின் ஒளியாய் நீ
பிரகாசித்தாலும் நம்பிக்கை எனும்
எண்ணை இல்லாவிடில் உன்னால்
நிரந்திரமாய் பிரகாசிக்க முடியாது.

ஒரு பொய்க்கு உண்மையான
காரணம் இருக்கும்,
ஒரு உண்மைக்கு பொய்யான 
காரணம் இருக்கமுடியாது.

காலம் கடந்த ஞானம் 
முற்றுபெறுவதில்லை 
காலங்களை கடந்த ஞானம் 
விட்டுப்பிரிவதில்லை.

உலகை வெளிச்சமாக்கிய சூரியனால் 
உன்னை வெளிச்சமாக்க முடியாது 
உன்னில் நீ பிரகாசித்துவிட்டால் 
உன்னாலும் இவ்வுலகை 
பிரகாசிக்க வைக்க முடியும்.

அன்பை எடுப்பவன் ஆயுதத்தைவிட 
கூர்மையானவன்,
ஆயுதத்தை எடுப்பவன் அன்பினால் 
கூர்மையாக்கப்படாதவன். 

7 கருத்துகள்:

விஜய் சொன்னது…

ஆயுதத்தை எடுப்பவன் அன்பினால்
கூர்மையாக்கப்படாதவன்.

அருமையான வரிகள் சங்கர்
வாழ்த்துக்கள்

விஜய்

ஹேமா சொன்னது…

எல்லாச் சிந்தனைத் துளிகளுமே சிந்திக்க வேண்டியவையே.எனக்கும் பிரயோசனமாயிருக்கு சங்கர்.

சந்தான சங்கர் சொன்னது…

நன்றி விஜய்
என்றும் உங்கள் ஆதரவு
பெருமகிழ்ச்சி..நன்றி ஹேமா
உங்களுக்கும் பயனுள்ளதாய்
எழுதியது நிறைவு..

Thenammai Lakshmanan சொன்னது…

//உலகை வெளிச்சமாக்கிய சூரியனால்
உன்னை வெளிச்சமாக்க முடியாது
உன்னில் நீ பிரகாசித்துவிட்டால்
உன்னாலும் இவ்வுலகை
பிரகாசிக்க வைக்க முடியும்.//

அருமையான வரிகள் சந்தான சங்கர்

velji சொன்னது…

சிந்தனைகள் உபயோகமானவை.

முயன்றால் நீ சூரியனாய் பிரகாசிக்கலாம்...படிப்பவருக்கு டானிக்!

நன்றி சங்கர்!தொடருங்கள்!

சந்தான சங்கர் சொன்னது…

தேனம்மை

மிக்க நன்றி தேனம்மை
சிந்தனை துளிகளை ரசித்தமைக்கு.

வேல்ஜி

நன்றி வேல்ஜி வருகைக்கும்
வாழ்த்துக்கும். தொடர்ந்து வாருங்கள்
அன்பு நிறைய...

இரசிகை சொன்னது…

MIGA ARUMAI....:)

//ஆயுதத்தை எடுப்பவன் அன்பினால்
கூர்மையாக்கப்படாதவன்//

!