வெள்ளி, 20 நவம்பர், 2009

கண்ணாடி முன்கண்ணாடி முன்
கவிதையாய்
நான்..
கவிதையின்
அர்த்தமாய்
என்றும் நீ..

இதயத்தில்
உன்னை
தேடினேன்...
என்னை
தொலைத்துவிட்டு..

பெரிதான 
அன்பின் முன் 
சிறிதாகிபோன
உயிர்...
சிறிதான 
உயிரிலும் 
பெரிதாக 
கலந்தது 
உன் அன்பு..

நீயும்
நானும்
பற்றிக்கொள்ள
பற்றிக்கொண்டது
காதல்
நெருப்பு..

15 கருத்துகள்:

velji சொன்னது…

/பெரிதான
அன்பின் முன்
சிறிதாகிபோன
உயிர்...
சிறிதான
உயிரிலும்
பெரிதாக
கலந்தது
உன் அன்பு../

அழகிய முரண்.

விஜய் சொன்னது…

வேல்ஜி கூறியதை நானும் வழிமொழிகிறேன்

வாழ்த்துக்கள்

விஜய்

Admin சொன்னது…

அருமையாக இருக்கிறது.

சந்தான சங்கர் சொன்னது…

@ வேல்ஜி
நன்றி வேல்ஜி
உங்கள் ஆதரவு தொடர
விளிக்கிறேன்.


@விஜய்
எப்பவும் உங்கள் கைகள்
நிறைவு நிறைய
நன்றி விஜய்

@ சந்ரு
வருகைக்கும்
வாழ்த்துக்கும் மிக்க நன்றி சந்ரு.

Thenammai Lakshmanan சொன்னது…

//பெரிதான
அன்பின் முன்
சிறிதாகிபோன
உயிர்...
சிறிதான
உயிரிலும்
பெரிதாக
கலந்தது
உன் அன்பு..//

அருமை சந்தான சங்கர்

Thenammai Lakshmanan சொன்னது…

//பெரிதான
அன்பின் முன்
சிறிதாகிபோன
உயிர்...
சிறிதான
உயிரிலும்
பெரிதாக
கலந்தது
உன் அன்பு..//

அருமை சந்தான சங்கர்

Thenammai Lakshmanan சொன்னது…

உங்களை ஒரு தொடருக்கு அழைத்து இருக்கிறேன் நண்பரே

பிடித்த பத்தும் பிடிக்காத பத்தும்

தொடருங்கள்
வாழ்த்துக்கள்

சந்தான சங்கர் சொன்னது…

தேனம்மை.

நன்றி தேனம்மை..
பிடித்து போட்டுட்டீங்க
வருகிறேன்...

பா.ராஜாராம் சொன்னது…

நல்லா இருக்கு சங்கர்.

Ashok D சொன்னது…

நல்லாயிருக்குங்க...

சந்தான சங்கர் சொன்னது…

பா.ரா

நன்றி நிறைய மக்கா
தொடர்ந்து வாங்க..


அசோக்

கூப்பிட குரலுக்கு
வந்திட்டீங்க நிரம்ப
சந்தோசம்..

ஹேமா சொன்னது…

சங்கரின் காதல் கவிதை கன நாளுக்குப் பிறகு.அன்பின் அடியில் உயிர்கூடச் சிறு துகள்தானோ!

க.பாலாசி சொன்னது…

//பெரிதான
அன்பின் முன்
சிறிதாகிபோன
உயிர்...
சிறிதான
உயிரிலும்
பெரிதாக
கலந்தது
உன் அன்பு..//

ரசனையான வரிகள்....


//நீயும்
நானும்
பற்றிக்கொள்ள
பற்றிக்கொண்டது
காதல்
நெருப்பு..//

ஓகோ...

கவிதையை ரசித்தேன்....

சத்ரியன் சொன்னது…

//பெரிதான
அன்பின் முன்
சிறிதாகிபோன
உயிர்...
சிறிதான
உயிரிலும்
பெரிதாக
கலந்தது
உன் அன்பு..//

ச.சங்கர்,

பெயரில் மட்டும்தான் "மணம்" என்றிருந்தேன்.
காதல் கவிதையிலும் "மணம்" மிகுந்திருக்கிறதே.

என்னை மன்னிக்க வேண்டும்.
கவிதையை நான் வாசிக்கவில்லை.

அதை சுவாசித்துக் கொண்டிருக்கிறேன்.

சந்தான சங்கர் சொன்னது…

ஹேமா

வாங்க ஹேமா வேலை
அதிகம்போல வாழ்த்துக்கு
மிக்க நன்றி தோழி..

பாலாசி

வந்துட்டீங்களா நிரம்ப
மகிழ்ச்சி நன்றி பாலாசி.


சத்ரியன்
உங்கள் சுவாசம் என்
விசுவாசம். அன்பு மனம் நிறைய
நன்றி சத்ரியன்..