வியாழன், 26 நவம்பர், 2009

பசி


மாரில் தங்கமறுத்த பாலுக்கு
விழைந்து வீறிட்ட குழந்தையை
இடுப்பில் தக்க வைத்து
இறைஞ்சுகிறாள்...
இரக்கமற்றவனின் வாகன யன்னலும்
இறங்க மறுக்கின்றது..
சிவப்பு விளக்கு நிறுத்தத்தில் 
பச்சிளம் தளிரின் பசி நிறுத்தமுடியாமல்..

யாசித்தவனுக்கு 
யோசித்து சட்டைப்பை தடவி 
தொட்டு விழுந்த ஒற்றை காசில் 
திறந்தது பசியடைத்த செவிகள்..

விருந்தொன்றில் 
பசியற்றவன் புசித்த மிச்சம் 
நிரப்புகின்றது குப்பைத்தொட்டியின் 
வயிற்றினை..

யாக்கையின்
முதல் வேட்கை 
தணிய துணிந்த 
பிச்சையாய்... 

11 கருத்துகள்:

விஜய் சொன்னது…

குப்பை தொட்டியின் வயிறு

ரொம்ப நல்லா இருக்கு சங்கர்

வாழ்த்துக்கள்

விஜய்

சத்ரியன் சொன்னது…

//சிவப்பு விளக்கு நிறுத்தத்தில்

பச்சிளம் தளிரின் பசி நிறுத்தமுடியாமல்..//

ச.சங்கர்,

இந்த வரிகளை "என்ன சொல்லி பாராட்டுவது.

நீங்கள் சுட்டிக்காட்ட விரும்பிய கருத்தின் "உச்சம்" இது.

சந்தான சங்கர் சொன்னது…

@ விஜய்

என்றும் நன்றிகள்
பல விஜய்..

@ சத்ரியன்

சரியாக சொல்லிவிட்டீர்கள்
நன்றி சத்ரியன்.

க.பாலாசி சொன்னது…

//விருந்தொன்றில்
பசியற்றவன் புசித்த மிச்சம்
நிரப்புகின்றது குப்பைத்தொட்டியின்
வயிற்றினை..//

உண்மையை சுட்டிடும் வரிகள்....பசிக்குத்தான் எத்தனை வலிகள்..

கவிதை அருமை....

thiyaa சொன்னது…

என்ன வரிகள்
அற்புதம்
அனுபவித்துப் படிச்சேன்.
வாழ்த்துகள்

சந்தான சங்கர் சொன்னது…

பாலாசி

தொடர்வருகைக்கும் பாராட்டுக்கும்
நன்றி தோழா.

தியாவின் பேனா

நன்றி நண்பரே..
உங்கள் வரிகளும் நிறைய ஊக்கம் தருகிறது..

Thenammai Lakshmanan சொன்னது…

//தொட்டு விழுந்த ஒற்றை காசில்
திறந்தது பசியடைத்த செவிகள்..//

உண்மையான வார்த்தைகள் சந்தான சங்கர்

யதார்த்தத்தை அறைகிறது கவிதை

Thenammai Lakshmanan சொன்னது…

பிடித்த பத்தும் பிடிக்காத பத்தும் எழுத ஒப்புக் கொண்டதற்கு நன்றி

சந்தான சங்கர் சொன்னது…

தேனம்மை

நன்றி தேனம்மை
போதிய நேரம் கிடைப்பதில்லை
வாய்க்கும்போது விரைவில் இடுக்கை
இடுகின்றேன்.

ஹேமா சொன்னது…

நானும் கவிப்பசியோடுதான் உங்கள் பக்கம் வந்திருக்கிறேன்.சங்கர் போடுங்கள் கொஞ்சம்.

மாவீரர் தின அழுத்தம்.வீட்டில் விருந்தினர்கள்.தாமதங்கள் இனித் தளரும்.

பசியின் கொடுமையை அழகான வரிகளில் ஆனால் வேதனயோடு கொண்டு வந்திருக்கிறீர்கள் சங்கர்.

இரசிகை சொன்னது…

sabaash....

remba pidichchirukku!!