வெள்ளி, 25 டிசம்பர், 2009

சிந்தனை துளிகள்..3


நேற்றைய அனுபவம்,
இன்றைய சிந்தனை!
இன்றைய சிந்தனை, 
நாளைய வழிகாட்டி!
நாளைய வழிகாட்டி, 
இன்றைய தத்துவம்..

தெய்வ நம்பிக்கை என்பது 
உன் உடலில் இருக்கும் 
குருதி போன்றது,
ஒவ்வொரு துளி சிந்தும்பொழுதும் 
உன் இறை நம்பிக்கையை 
நினைவுபடுத்திக் கொள்கிறாய்.

நீ கடந்து சென்ற பாதையில்தான் 
நீ மறந்து சென்ற வழிகள் இருக்கும் 
நீ மறந்து சென்ற வழிகளில்தான் 
நீ கடந்துவிட்ட வாழ்வு  இருக்கும்..

மண்ணில் இருக்கும்
இரும்பு துகள்களுக்குகூட ஒரு 
காந்தபுலன் கிடைத்துவிட்டால் 
எழுந்துவிடுகிறது,
நீயும் உன் திறமைகளுக்கான 
புலனில் எழாவிட்டால்...
உன் திறமைகளும் மண்ணில் 
மறைந்த துகள்களே..!

 

11 கருத்துகள்:

விஜய் சொன்னது…

மனதுகளை உழைப்பு எனும் காந்தத்தில் ஒட்டவைக்கிறது உனது கவிதை நண்பா

வாழ்த்துக்கள்

விஜய்

Ashok D சொன்னது…

ஆனா இந்த கார்த்தால எழுந்துக்கறதுதான் வரவேமாட்ங்கது சங்கர் :)

கலா சொன்னது…

“ஊட்டப்” போசாக்கு ஒளிந்திருக்கும்
அழகான,அருமையான,நம்பிக்கையூட்டும்
கவிவரிகள் சங்கர் நன்றி.

சந்தான சங்கர் சொன்னது…

விஜய்

முதல் இதழ் பிரிக்கும்
புன்னகையாய் உங்கள் வருகை
என்றும் மகிழ்ச்சி நண்பா.

அசோக்

முயற்சிக்க முயற்சிக்கலாம்
எழுந்திருக்க முயற்சிப்பது
சிரமம்தான் போல
நன்றி நண்பா..

கலா

உங்கள் தொடர் வாசிப்பு
ஊக்கம் தருகிறது
மிக்க நன்றி தோழி.

வாணி நாதன். சொன்னது…

தோழா,
தன்னம்பிக்கை வரிகள் அருமை...
வாழ்த்துக்கள்...

க.பாலாசி சொன்னது…

//தெய்வ நம்பிக்கை என்பது
உன் உடலில் இருக்கும்
குருதி போன்றது,
ஒவ்வொரு துளி சிந்தும்பொழுதும்
உன் இறை நம்பிக்கையை
நினைவுபடுத்திக் கொள்கிறாய்.//

unmai....

ஹேமா சொன்னது…

அத்தனை துளிகளும் மனதோடும் வாழ்வோடும் இணைந்திருக்கிறது சங்கர்.

சந்தான சங்கர் சொன்னது…

வாணி

தொடர் வருகை மகிழ்ச்சியளிக்கிறது
தோழி..

பாலாசி

வாங்க பாலாசி, மீண்டும் வருகை
மிகுந்த மகிழ்ச்சி நண்பா..


ஹேமா

நன்றி ஹேமா, உங்கள் வருகையில் நிறையும்
பின்னோட்டம்.

Thenammai Lakshmanan சொன்னது…

//மண்ணில் இருக்கும்
இரும்பு துகள்களுக்குகூட ஒரு
காந்தபுலன் கிடைத்துவிட்டால்
எழுந்துவிடுகிறது,
நீயும் உன் திறமைகளுக்கான
புலனில் எழாவிட்டால்...
உன் திறமைகளும் மண்ணில்
மறைந்த துகள்களே..!//

அருமை சந்தான சங்கர்

புத்தாண்டு வாழ்த்துக்கள்

சந்தான சங்கர் சொன்னது…

தேனம்மை

மிக்க நன்றி தோழி
பிடித்த பத்து
பிடிக்காத பத்து
எழுத இயலவில்லை
மன்னியுங்கள்..
அடுத்த தொடர்பதிவில் கட்டாயம்
கலந்துகொள்கிறேன்..

மாணிக்கம் சொன்னது…

உன்னை தான் நன்பா.........