சனி, 12 டிசம்பர், 2009

சகவாச சேறு


நத்தையிட்ட ஈரம்போல்
நகர்ந்துகொண்டிருந்த பின்னிரவு,

அரவமற்ற அறையினில்
அழுதுகொண்டே தீர்ந்துகொண்டிருந்த 
மெழுகுவர்த்தியாய் அவள்..

மது நீர்த்து மாது தீர்த்திட 
கூலி கொடுக்கிறது மாமிச பட்சி,
பட்சியாய் நுழைந்ததெல்லாம்
பச்சையாய்.....!

வீணையவள் மீட்டப்படுகிறாள் 
ஈன ஸ்வரங்களாய்..
மீட்கப்பட முடியாமல்...
தந்தியறுத்து தந்தியறுத்து
பிணைக்கப்படுகிறாள் மீண்டும் 
பந்தி படைக்க.. 

என்றோ பூக்களைகூட பாரமென 
வீசியவள் தலைக்கனம் 
சகவாச சேற்றினில் விழுந்து 
புரளமுடியாமல் புலம்புகிறது..

நாதியறுத்து வந்தவளின் 
நாடியறுக்கும் உலகினில்..

15 கருத்துகள்:

Ashok D சொன்னது…

நல்லாயிருக்கு சங்கர்

வாணி நாதன். சொன்னது…

உவமைகள் மிகவும் அருமை
சரியாக தேர்வு செய்திருக்கிறீர்கள்...
வாழ்த்துக்கள் சங்கர்...

விஜய் சொன்னது…

மிகவும் பிடித்திருக்கிறது சங்கர்

தந்தியருத்து தந்தியருத்து

நாதியருத்து வந்தவளின்
நாடியருக்கும் உலகினில்..

அனைத்திற்கும் ரு க்கு "று" போடவேண்டும்

விஜய்

நினைவுகளுடன் -நிகே- சொன்னது…

அழகான கவி வரிகள்
வாழ்த்துகள்

சந்தான சங்கர் சொன்னது…

@ அசோக்

வாழ்த்துக்கு மிக்க நன்றி

@ வாணிநாதன்

மகிழ்ச்சி நிறைய வாணி
உங்கள் ஆதரவு தொடர விழைகிறேன்.

@ விஜய்

நன்றி விஜய்
இன்றுபோல்
என்றும் பயின்றுணர
விழைகிறேன்..

கமலேஷ் சொன்னது…

அழகான கவி வரிகள்
வாழ்த்துகள்

அன்புடன் மலிக்கா சொன்னது…

அழகான கவிதை வரிகள்
வாழ்த்துகள்..

சந்தான சங்கர் சொன்னது…

நிகே

தொடர் வாசிப்புக்கு நன்றி
தோழியே..

கமலேஷ்

வாழ்த்துக்கு மிக்க நன்றி நண்பரே..


மலிக்கா

வாழ்த்துக்கு மிக நன்றி மலிக்கா
தொடர்ந்து வாருங்கள்..

பெயரில்லா சொன்னது…

excellent. yeno varthaikal illai vazhltha..yentha varthai solli paratta.aththanai varthaium koori vittean..mannithu vidunkal..Nandri...sankar

ஹேமா சொன்னது…

சங்கர் கரையவும் இல்லை குறையவுமில்லை என் வருகை.சிலசமயம் நேரக்குறைச்சல்தான்.போனவாரத்தில் ஒரு தரம் வந்தேன்.பழைய இடுகையே இருந்தது.

சரி சரி ஒரு குறையுமில்லை.

கவிதை ஒரு விபச்சாரியின் வேதனையா ?நல்ல வரிகள் வலியோடு.

Kala சொன்னது…

விலைமகளோ!மனைமகளோ!!
அனைவரும் பெண்கள் தான்

பெண்ணாய்ப் பிறந்தால்....{பள்ளியறைப் பாவைகள்}
விரும்பியோ ,விரும்பாமலோ
ஒன்றில் தள்ளப்படும் போது......
வருகின்ற உணர்வுகளை படம் பிடித்துக்
காட்டுகின்றன உங்கள் மனக்கருவி
அருமை அத்தனையும் உண்மை.

சிவாஜி சங்கர் சொன்னது…

ரொம்ப பிடிச்சிருக்கு தலைவரே.. :))

சந்தான சங்கர் சொன்னது…

பெயரில்லா

நன்றி பெயரில்லா. உங்கள் பெயர் சொல்ல
என்ன தயக்கம்..பெயருடன் எழுதுங்கள் தொடர்ந்து.


ஹேமா

வாங்க ஹேமா, உங்கள் வரவு ஓர் ஊக்கம் அதனால்தான் அப்படி எழுதினேன் மிக்க
நன்றி ஹேமா..


கலா

வாங்க கலா, இது உங்கள் முதல் வருகைஉங்கள் பின்னோட்டம் நிறைய படித்திருக்கின்றேன்.
வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி. தொடர்ந்து வாருங்கள்.


சிவாஜி சங்கர்

நன்றி நண்பா, நீவிர் தொடர்ந்து வர விழைகிறேன்..

சத்ரியன் சொன்னது…

//வீணையவள் மீட்டப்படுகிறாள்
ஈன ஸ்வரங்களாய்..
மீட்கப்பட முடியாமல்...
தந்தியறுத்து தந்தியறுத்து
பிணைக்கப்படுகிறாள் மீண்டும்
பந்தி படைக்க.. //

ச.சங்கர்,

என்ன சொல்லி வாழ்த்தட்டும் உன்னை...?

வெறும் ‘அருமை’ன்னு சொன்னா இந்தக் கவிதையின் பெருமை குன்றிவிடுமே...!

சந்தான சங்கர் சொன்னது…

மிக்க நன்றி சத்ரியன்

உங்கள் ஊக்கம் தெம்பூட்டுகிறது..