ஆரோகணமும் அவரோகணமும்
புணர்ந்துகொண்டிருந்தது,
ஆழியொத்த தாழி ஒன்றில்,
கத்திப்புற்கள் கண்ணீர் நிரப்ப
சபிக்கப்பட்டிருந்தது..
அரவமொத்த பாத தீண்டல்கள்
சாகா வரம்பெற்று உருண்டுகொண்டிருந்தது
பூகோள பந்தொன்று..
ஆயிரம் சூரிய பார்வை ஒற்றை வட்டத்திற்குள்
எட்டுத்திக்கும் நிழல் விம்மம்..
பச்சை பாய் கிடத்தி காலனிட்ட
உந்துதலில் ஓலமிட்டும் மரிக்கக் கடவாத
ஒரு பிடி காற்றுக் கோளம்...
(நன்றி நேசமித்திரன்)
23 கருத்துகள்:
சந்தான சங்கர்
சொற்களின் சேர்மானம் மொழித்திருகல் கடந்து அர்த்தவெளியை அடைந்திருப்பது மகிழ்வு
வாழ்த்துகள்
சத்தியமா புரியிலை நண்பா
அவருக்கு புரிஞ்சுடிச்சு
நமக்கு ?
உயரங்கள் தொட ஆரம்பித்துவிட்டீர்கள்
வாழ்த்துக்கள்
விஜய்
ம்ம்...அடிச்சுகலக்குங்க..நண்பரே..
ரொம்ப நல்லா இருக்கு...வாழ்த்துக்கள்...
நேசமித்திரன்
நேசா பறந்து விரிந்து நீண்டு செல்லும்
உங்கள் பாதையில் நானும் சிறு அடி வைத்து பார்க்கின்றேன்.
மிக்க நன்றி மக்கா.
விஜய்
புரியும் நண்பா எளிமைதான் முயற்சியுங்கள்
விவரிக்கின்றேன்..
அசோக்
மிக்க நன்றி தோழா உங்கள் கவிதை
வெற்றி பெற வாழ்த்துகிறேன்.
கமலேஷ்
வாங்க கமலேஷ்
வாழ்த்துக்கு மிக்க நன்றி நண்பா..
உங்களின் வார்த்தைகள், வாக்கிய அமைப்பு இவைகள் அனைத்தும் மிகவும் அருமையாக உள்ளது. கொஞ்சம் பொறாமையாக கூட உள்ளது... உங்களில் கவிதை மீது...
வாழ்த்துக்கள் தோழா..
வாவ்! அருமையாய் இருக்கு,சங்கர்!
வாவ்! அருமையாய் இருக்கு,சங்கர்!
gud. continue.
regards
ram
www.hayyram.blogspot.com
//கத்திப்புற்கள் கண்ணீர் நிரப்ப
சபிக்கப்பட்டிருந்தது..//
சந்தனசங்கர்,
சிகரமாய் உயர்ந்து நிற்கும் கற்பனை.
(என்ன செய்ய துயரங்கள்... மகிழ்வின் தலங்களையும் கவ்வத் தொடங்கி விட்டது)
சந்தான சங்கர் நிஜமாவே நேசனோடதுன்னு நினைக்கவைச்சுருச்சு ஒரு நிமிஷம்
///நேசமித்ரன் கூறியது...
சந்தான சங்கர்
சொற்களின் சேர்மானம் மொழித்திருகல் கடந்து அர்த்தவெளியை அடைந்திருப்பது மகிழ்வு
வாழ்த்துகள்///
சங்கர், இதுக்கு மேல என்ன வேனும். இன்னும் நல்லா அடிச்சி ஆடுங்க சங்கர்.
நான் அந்த (நேசன் ) பாதிப்பிலிருந்து வெளிவர முயன்று கொண்டிருக்கிறேன்
நீங்கள் நுழைகிறீர்கள் போல் . கவிதை அருமை . ஒரு நேசன் போதுமே
எதற்கு பிரதிகள் ??? ( என்னாலும் வெளிவர முடியவில்லை அந்த ஆற்றாமையில் இந்த பின்னூட்டம் )
தவறு இருப்பின் மன்னிக்க
வாணி நாதன். கூறியது...
உங்களின் வார்த்தைகள், வாக்கிய அமைப்பு இவைகள் அனைத்தும் மிகவும் அருமையாக உள்ளது. கொஞ்சம் பொறாமையாக கூட உள்ளது... உங்களில் கவிதை மீது...
வாழ்த்துக்கு மிக்க நன்றி வாணி
பொறமைபடும் அளவுக்கு நான் பெரும்
கவிஞனல்ல தோழி..
பா.ரா
வாங்க மக்கா எப்பவும் உங்க வாழ்த்தில நிறைகின்றது ஏதோ ஒன்று..
நன்றி நண்பரே..
hayyram
உங்கள் முதல் வருகைக்கும்
வாழ்த்துக்கும் நன்றி நண்பரே..
சத்ரியன் கூறியது...
//கத்திப்புற்கள் கண்ணீர் நிரப்ப
சபிக்கப்பட்டிருந்தது..//
சந்தனசங்கர்,
சிகரமாய் உயர்ந்து நிற்கும் கற்பனை.
(என்ன செய்ய துயரங்கள்... மகிழ்வின் தலங்களையும் கவ்வத் தொடங்கி விட்டது)
சத்ரியன்
உண்மைதான் நண்பா,
உங்களின் வருகையும் வாழ்த்தும்
உயர்த்துகிறது என்னை. நன்றி.
thenammailakshmanan கூறியது...
சந்தான சங்கர் நிஜமாவே நேசனோடதுன்னு நினைக்கவைச்சுருச்சு ஒரு நிமிஷம்
அந்த ஒருநிமிடத்தில் நேசனான நேசம்
மகிழ்ச்சி தோழி, நன்றிகள் பல
.S.A. நவாஸுதீன் கூறியது...
///நேசமித்ரன் கூறியது..
சந்தான சங்கர்
சொற்களின் சேர்மானம் மொழித்திருகல் கடந்து அர்த்தவெளியை அடைந்திருப்பது மகிழ்வு
வாழ்த்துகள்///
சங்கர், இதுக்கு மேல என்ன வேனும். இன்னும் நல்லா அடிச்சி ஆடுங்க சங்கர்..
நேசனைபோல் உங்களைபோல் வாழ்த்துக்கள் கிடைக்கபெற்றிடில்
இன்னும் வானில் உயர்ந்து செல்ல நல் ஊக்கம் தோழா..
பாலா கூறியது...
நான் அந்த (நேசன் ) பாதிப்பிலிருந்து வெளிவர முயன்று கொண்டிருக்கிறேன்
நீங்கள் நுழைகிறீர்கள் போல் . கவிதை அருமை . ஒரு நேசன் போதுமே
எதற்கு பிரதிகள் ??? ( என்னாலும் வெளிவர முடியவில்லை அந்த ஆற்றாமையில் இந்த பின்னூட்டம் )
தவறு இருப்பின் மன்னிக்க
நேசனை தொடர்வது
பாதையா இல்லை
போதையா!!!
விளங்கவில்லை நண்பா
இதற்கு நேசன்தான் பதிலளிக்கவேண்டும்.
பாலா அழைப்பை ஏற்று பதில் அளித்தமைக்கு
மிக்க நன்றி நண்பா..
வாவ் ,,,,... அருமையான
ஒரு பந்துவிளையாட்டின்
அடக்கம்!! உங்கள் எண்ண
விரிசல்களில்....வந்த வரிசை வரிகள்
நன்றி சங்கர்.
பாருங்க....நேசனுக்கு மட்டும் புரிஞ்சுபோச்சு.
வாழ்த்துகள் சங்கர்.
அற்புதமான வரிகள்
அழகிய கவிதை நடை வாழ்த்துகள்
வாவ், நல்லா இருக்கு. வாழ்த்துகள் சங்கர்.
அனுஜன்யா
கலா
கவிதை புரிந்து வாழ்த்தியமைக்கு
மிக்க நன்றி தோழி..
ஹேமா
நன்றி ஹேமா தோழிக்கு புரிந்தது
உங்களுக்கும் புரியுமென நினைத்தேன்.
தியா
மிக்க நன்றி தியா உங்கள் வாழ்த்து
எம்மை மெருகேற்றுகிறது .
அனுஜன்யா
மிக்க நன்றி நண்பரே அழைத்தமைக்கு
வந்து பின்னூக்கம் தந்தது பெருமகிழ்ச்சி.
கருத்துரையிடுக