இப்படியும் அப்படியும்
ஆட்டுவிக்கிறான்
எப்படிப்பட்ட மனிதர்களையும்,
கத்திமுன் பணியவைக்கிறான்
புத்திகொண்ட புருஷர்களையும்.
எப்பவாது காயப்படுத்தியும்
விடுகிறான்.
இத்தனையும் செய்துவிட்டு
ரசம் சூழ்ந்த கண்ணாடி முன்
நம்மை ஒப்பனை கவிதையும்
ஆக்கிவிடுகிறான் அரையடி
கத்திகொண்டு..
(நன்றி பா.ரா )
நகல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நகல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புதன், 20 ஜனவரி, 2010
புதன், 6 ஜனவரி, 2010
ஒரு பிடி காற்றுக் கோளம்
ஆரோகணமும் அவரோகணமும்
புணர்ந்துகொண்டிருந்தது,
ஆழியொத்த தாழி ஒன்றில்,
கத்திப்புற்கள் கண்ணீர் நிரப்ப
சபிக்கப்பட்டிருந்தது..
அரவமொத்த பாத தீண்டல்கள்
சாகா வரம்பெற்று உருண்டுகொண்டிருந்தது
பூகோள பந்தொன்று..
ஆயிரம் சூரிய பார்வை ஒற்றை வட்டத்திற்குள்
எட்டுத்திக்கும் நிழல் விம்மம்..
பச்சை பாய் கிடத்தி காலனிட்ட
உந்துதலில் ஓலமிட்டும் மரிக்கக் கடவாத
ஒரு பிடி காற்றுக் கோளம்...
(நன்றி நேசமித்திரன்)
லேபிள்கள்:
நகல்
வெள்ளி, 1 ஜனவரி, 2010
நகல்
ஒரு போக்குவரத்து சாலை நிறுத்தத்தில்
நம் வலையுலக ஜாம்பவான்களின் வரிகள்
எப்படி இருக்குமென்று ஒரு சிறு கற்பனை..
நேசமித்திரன்
மேகம் புணர்ந்த துளிகளில் அழுக்ககற்றி குளித்தது
சேன்றோவின் வைபர் கைகள்,
மரித்துக்கொண்டிருந்த சிகப்பு வினாடிகளில்
கசிந்துகொண்டிருந்தது சைலன்சர் சுருட்டு.
மெர்சிடிசின் யன்னலில் நிழல் முகம்
ஒப்பனை செய்துகொண்டிருந்தது
சாலை கடந்த கிளையொன்று.
தரை புணர்ந்த தடம் விட்டுசென்றது
தண்ணீர் வாகனம் பச்சை ஒளி கடந்து...
பா.ரா
நின்ற வாகனத்தில் விழித்தெழுந்தான் பிஞ்சுக்கரம் பட்டு,
கைக்குழந்தையுடன் நின்றுகொண்டிருந்தாள் பெண்ணொருத்தி,
மாமாவ புடிச்சுக்கோ என்றாள் மூன்று வயது மகனிடம்,
பலூனுக்கு விழைந்து அழுதவனை அதட்டினாள்
உங்கப்பன் சரியா இருந்தா நமேக்கேன்டா
இந்த நிலைமையென்று குரல் தழுத்தாள்..
எங்கோ தப்புணர்ந்தவன் வேகமாய் இறங்கி
வாங்கி வந்தான் கைநிறைய பலூன்களுடன்
அழுத குழந்தையின் கைகளில் ஒன்றை திணித்து..
சிறு சிறு ஊதல்களில் பெரிதாகும் பலூனைப்போல்
சிறு சிறு ஊடல்களில் பெரிதாகும் பந்தம்
உணர்ந்தவனாய் விட்டுவந்த மனைவியையும்
குழந்தைகளையும் எண்ணி பேருந்து நிற்கும்முன்
இறங்கிகொண்டிருந்தது அவன்மனம்
அடுத்த நிறுத்தத்தில்....
(நேசமித்ரா, பா.ரா பிழையிருந்தால் மன்னியுங்கள்
உங்கள் நிழலாய் நானும் வரைந்து
வடித்து பார்க்கின்றேன் அவ்வளவே)
அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்..

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)