இப்படியும் அப்படியும்
ஆட்டுவிக்கிறான்
எப்படிப்பட்ட மனிதர்களையும்,
கத்திமுன் பணியவைக்கிறான்
புத்திகொண்ட புருஷர்களையும்.
எப்பவாது காயப்படுத்தியும்
விடுகிறான்.
இத்தனையும் செய்துவிட்டு
ரசம் சூழ்ந்த கண்ணாடி முன்
நம்மை ஒப்பனை கவிதையும்
ஆக்கிவிடுகிறான் அரையடி
கத்திகொண்டு..
(நன்றி பா.ரா )
12 கருத்துகள்:
அழகான கவிதை...ரசித்தேன். பகிர்தலுக்கும் நன்றி.
கவிதை ஒப்பனை இல்லாமலேயே அழகாக இருக்கிறது
வாழ்த்துக்கள்
விஜய்
ரொம்ப ரொம்ப நல்ல இருக்கு தோழா...
தோழி வாணி..
//புத்திகொண்ட புருஷர்களையும். //
//நம்மை ஒப்பனை கவிதையும்
ஆக்கிவிடுகிறான் அரையடி
கத்திகொண்டு..//
ரொம்ப நல்லாயிருக்குங்க சங்கர்
பாலாசி
முதல் வருகைக்கும் பகிர்தலுக்கும்
நன்றி பாலாசி..
விஜய்
ஏதோ நம்ப கற்பனைக்கு வந்தது
பிடிச்சிருந்தா மகிழ்ச்சி நண்பா..
வாணி நாதன்
வாங்க வாணி சந்தோசம் தோழி..
அசோக்
தொடர்ந்து வரும் உங்கள் பின்னூட்டம்
ஊக்கமளிக்கிறது தோழரே..
தனித்துவம் இருக்கு.எதுக்கு பாரா?
:-)
சங்கர் உங்கள் அனுபவத்துடன்.....கூடி
பளிச்சிட்ட வரிகள் .....நன்று
கத்தி அவன் கையில்
கவனமாய்க் கதைக்கவேணும்.
கவிதையாவும் காட்டுவான்
கதையாவும் ஆக்கிடுவான்.
இது எப்பிடி இருக்கு.சங்கர் பாணியில நானும் பின்னூட்டம்.
பா.ரா
நண்பரே உங்களை மனதிற் கொண்டு
எழுதியாதால் பெயரிட்டேன்
நன்றி மக்கா..
கலா
அனுபவங்களை உங்கள் பின்னூட்டங்கள்
நிறைக்கின்றது தோழி..
ஹேமா
வாவ்! இது இவ்வளவுதாங்க
நான் பின்வாங்கிகிறேன்..
நன்றி ஹேமா..
//தனித்துவம் இருக்கு.எதுக்கு பாரா?
:-)///
போலச் செய்தல் போதும் சங்கர்
அம்மா சேலை போதும் தாவணி போடும் பருவம் வந்தாயிற்று
:)
வித்யாசமா, நன்றாக இருக்கு..
படமும் கவிதையும் மிக அழகு சந்தான சங்கர்
கருத்துரையிடுக