வெள்ளி, 4 டிசம்பர், 2009

ஓரடிக்கயிறு



மாலையின் முற்பொழுதொன்று,
ஆயிரமாயிரம் சுக துக்க சமிக்கைகளை
தாங்கி நின்ற தந்தி கம்பமொன்றில்
பசுவும் இளம் கன்றும் ஒன்றாக
பிணைக்கப்பட்டிருந்தது ஓரடி கயிற்றினில்..

பசியுற்ற கன்று பசுவின் மடி தேட எத்தனித்தது, 
கயிற்றின் கருணைக்குறைவால் கழுத்தழுந்தியது.
கன்றுணர்ந்த பசுவும் மடி கொடுக்க முயன்று முயன்று   
தோற்றது பிடி கொடுக்காத கயிற்றின் முனையில்..

தந்திக்கம்பத்துக்கும்  பசுவுக்கும் இடையில் 
கயிறு வீணையிட்ட தந்தியாய் துடித்தது,
எங்கோ அழு குரல் கேட்டு விழிக்கின்றான் 
உண்டு களைத்த கறவைக்காரன்..

கறக்க வந்தவன் கட்டவிழ்க்கின்றான் 
கன்றுக்கு கண நேர அனுமதியுடன்..
கயிற்றில் புண்பட்ட பசு கன்றின் மெய்பட்டு 
சிலிர்த்து முத்தமிட்டது மொத்த ரணம் தீர்ந்ததாய்..
முட்டிக்குடித்த கன்று பிரிக்கப்பட்டது
கருணையின் நேரம் தீர்ந்ததாய்..

இனி மடியின் குருதி வரை 
கறக்கவிழைபவனை பார்க்கின்றது, 
நிசியில் வன்புணரும் கடைசிக்காமுகனுக்கு  
பொறுத்துக்கொண்டு கை இறுக்கும் தாசியைப்போல்...




(இது உரையாடல் சமுக கலை இலக்கிய அமைப்பு 
நடத்தும் கவிதை போட்டிக்காக எழுதப்பட்டது.)

31 கருத்துகள்:

இரவுப்பறவை சொன்னது…

நல்லா இருக்குங்க... வெற்றி பெற வாழ்த்துக்கள்...

பூங்குன்றன்.வே சொன்னது…

கவிதை போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் !!

Thenammai Lakshmanan சொன்னது…

கவிதை அருமை

வாழ்த்துக்கள் நண்பரே

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்

பா.ராஜாராம் சொன்னது…

வாவ்!

ரொம்ப நல்லா இருக்கு சங்கர்.கண்டிப்பா வெற்றி பெரும்.வாழ்த்துக்கள்!

Vidhoosh சொன்னது…

//ஓரடிக்கயிறு அவ்வளவே....//
//சிறிது நேர போராட்டம்.. //
//கயிரிறுத்துக்கொண்டு...//
இதை எல்லாம் நீக்கி விடுங்கள். உங்களுக்குத் திருப்தியாக/ஒபபுதலாய் இருந்தால். :)

//கன்றுனர்ந்த// கன்றுணர்ந்த

அருமைங்க.
-வித்யா

நேசமித்ரன் சொன்னது…

வெற்றி பெற வாழ்த்துகள் மக்கா

நிறைய களை எடுக்கணும் எடுத்துட்டு அனுப்புங்க

கடைசி வரி ம்ம்ம்!!!!! அதே மொழியிறுக்கம் கவிதை முழுதும் இருக்கணும்னு ஆசை படுது மனசு

:)

ஜெனோவா சொன்னது…

நல்ல கவிதைத் தளம் , வெற்றி பெற வாழ்த்துக்கள் நண்பரே !

மண்குதிரை சொன்னது…

நண்பர் நேசமித்ரன் சொல்வதையே நானும் வழி மொழிகிறேன்.

வாழ்த்துக்கள் சங்கர்

விஜய் சொன்னது…

மிக வித்யாசமான கோணம்

சங்கர் வெற்றி பெற வாழ்த்துகிறேன்

விஜய்

சத்ரியன் சொன்னது…

//இனி மடியின் குருதி வரை
கறக்கவிழைபவனை பார்க்கின்றது
நிசியில் வன்புணரும் கடைசிக்காமுகனுக்கு
பொறுத்துக்கொண்டு கை இறுக்கும் தாசியைப்போல்...//

ச.சங்கர்,

அழுத்தமான ஒப்பீடு.

கவிதை.

தமிழ் உதயம் சொன்னது…

இந்த அரை மணி நேரத்தில் பத்து உரையாடல் கவிதையாவது படித்து இருப்பேன். எல்லாமே சிறப்பாக இருந்தது. நடுவர்களின் பாடு திண்டாட்டம் தான்.
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்

கமலேஷ் சொன்னது…

இந்த கவிதை கட்டாயம் வெற்றி பெரும்...
வெற்றிபெற்றே தீர வேண்டும்....

வாழ்த்துக்கள்.....

இன்றைய கவிதை சொன்னது…

கவிதை அருமை!

காட்சியை அப்படியே கண் முன் நிறுத்திவிட்டீர்கள்!
விதூஷ் அவர்கள் சொன்னது போல
எழுத்துப்பிழைகள்/ஏனையவையை நீக்கிவிட்டால்
பரிசு உங்களுக்குத்தான்!


-இன்றைய கவிதை நண்பர்கள்

Divya சொன்னது…

kandippaga vetri nichchayam...kaththiruppom anaivarum um nalla seithikaga. mana niraivudan vazhthukkal..sankar

S.A. நவாஸுதீன் சொன்னது…

வெற்றி பெற வாழ்த்துக்கள்

சந்தான சங்கர் சொன்னது…

மன்னிக்கவும்..
அதிக வேலை பளு பதிலிடுவதற்கு
தாமதமாகிவிட்டது..

@ இரவுப்பறவை

தங்கள் முதல் வருகைக்கும்
வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

@ பூங்குன்றன்.வே

தங்களின் வருகைக்கும்
வாழ்த்துக்கும் நன்றி நண்பரே..

@ தேனம்மை

உங்களின் தொடர் ஆதரவு
ஊக்கம் அளிக்கின்றது தோழி.
வாழ்த்துக்கு மிக்க நன்றி.

@ பா.ரா

மிக்க நன்றி மக்கா
கவிதையிலும் உயர்ந்து நிற்கின்றது
உங்கள் அன்பு.

@ வித்யா

மிக்க நன்றி தோழி
உங்களின்படியே மாற்றிவிட்டேன்
அந்த ண என் தளத்தில் வரவில்லை
உங்கள் பின்னூட்டத்தில் எடுத்து மாற்றினேன்.

@ நேசன்

என் தளத்தில் உங்களின் இரண்டாவது
பின்னோட்டம் இது மிக்க மகிழ்ச்சி எனக்கு எட்டியவரை களை எடுத்துவிட்டேன் நண்பா.
வாழ்த்துக்கு நன்றிகள் பல.

@ ஜெனோவா

தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
மிக்க நன்றி.

@ மண்குதிரை

வாழ்த்துக்கு நன்றி நண்பா..
களை எடுத்திருக்கின்றேன்.

@ விஜய்

என்றும் துணை நிற்பவர் நீங்கள்
உங்கள் அன்பு பேரு மகிழ்ச்சி நண்பா.

@ சத்ரியன்

உங்கள் தொடர் ஊக்கம் தெம்பூட்டுகிறது

நண்பா. வாழ்த்துக்கு நன்றி.

@ தமிழ் உதயம்

தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

@ கமலேஷ்

உங்களின் உறுதி விருது பெற்றதுபோல்
உள்ளது. வாழ்த்துக்கு நன்றி நண்பரே.


@ இன்றைய கவிதை நண்பர்கள்..

நிரம்ப மகிழ்ச்சி நண்பர்களே.
உங்கள் வாழ்த்து பெரு நிறைவு..

@ திவ்யா

உங்களைபோல்தான் எனது எதிர்பார்ப்பும்
மிக்க நன்றி திவ்யா.

@ நவாஸுதீன்

வாழ்த்துக்கு பெரு மகிழ்ச்சி நண்பரே...

இரசிகை சொன்னது…

yeppadi vote pannanumnu yenakkuth theriyala....

vazhththukal..:)

க.பாலாசி சொன்னது…

எனது வாழ்த்துக்களும் நண்பரே...

ஹேமா சொன்னது…

மனம் நிறைந்த வாழ்த்துக்கள் சங்கர்.

J S Gnanasekar சொன்னது…

கடைசி காமுகன் உவமை அருமை.

சந்தான சங்கர் சொன்னது…

@ இரசிகை

வாழ்த்துக்கு மிக்க நன்றி
இரசிகை..

@ பாலாசி

நன்றி நண்பா.

@ ஹேமா

மிக்க நன்றி ஹேமா.

@ ஞானசேகர்

வாழ்த்துக்கு மிக்க நன்றி நண்பரே..

Ashok D சொன்னது…

இப்பத்தான் படிச்சேன் சங்கர், நல்லாயிருக்கு வாழ்த்துகள் :)

வாணி நாதன். சொன்னது…

உங்களின் கவிதைக்கு நிச்சயம் வெற்றி கிட்டும் என்பதில் தினையளவும் ஐயமில்லை..
வாழ்த்துக்கள் சங்கர்..

சந்தான சங்கர் சொன்னது…

அசோக்

வாழ்த்துக்கு மிக்க நன்றிங்க
உங்க கவிதையும் சிறப்பா வந்திருக்கு.


வாணிநாதன்

அழைப்பை ஏற்று வந்தமைக்கு
மிக்க மகிழ்ச்சி, தொடர்ந்து
வாசியுங்கள் தோழியே..

நினைவுகளுடன் -நிகே- சொன்னது…

நானும் புதுசா வந்திருக்கிறேன். என்னையும் உங்களின் வலைக் குழாமில் இணைத்துக் கொள்ளுங்கள்.

சக்தி..! சொன்னது…

நல்லா இருக்கு..! நண்பரே...!

சிவாஜி சங்கர் சொன்னது…

//நிசியில் வன்புணரும் கடைசிக்காமுகனுக்கு
பொறுத்துக்கொண்டு கை இறுக்கும் தாசியைப்போல்...//
வாய்ப்பே இல்ல terrific lines...
வெற்றி பெற வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்...

காயத்ரி சொன்னது…

நண்பரே.. எதை சொல்ல? எதை விட? அத்தனை வரிகளும் அருமை... நீங்களும் வெற்றி பெற வாழ்த்துக்கள்...

thiyaa சொன்னது…

வெற்றி பெற வாழ்த்துக்கள்...

Senthilkumar சொன்னது…

வெற்றி பெற வாழ்த்துகள்!

பத்மா சொன்னது…

வைகோற் கன்று என்றில்லாமல் சொந்த கன்றாய் இருந்ததே பசுவின் பாக்கியம்.
அனைவரையும் வழி மொழிகிறேன்
வெற்றிக் கனி கைசேரும்
பத்மா....