போகி
செந்தூரமிட்டது அந்தி வானம்,
தாவாரம் தொட்டது ஆவாரப்பூக்கள்.
தேவாரம் பாடியது மங்கள இசை
ஆராவாரமிட்ட சிறு பெண்டிர்,
ரீங்காரமிட்டது மாலை வண்டுகள்.
மூவடிகம்பினில் தீமூட்டி சுவைத்த
முக்கண் சூரண தேங்காய்,
பழையன பற்றி எரிந்தது போகியில்
புதிய ஜோதியாய்..
'தை'த்திருநாள்
வானத் தை வளைக்கும் வானவில்
நாணத் தை விளைக்கும் பூவைகள்
கானத் தை இசைத்திடும் பாடல்கள்
புருவத் தை உயர்த்திடும் வீர விளையாட்டுக்கள்
பருவத் தை அடைந்திடும் விடலைப் பெண்கள்
கோலத் தை ஏற்றிடும் புதிய வாசல்
காலத் தை வென்றிடும்
இத் தை திருநாள்..
மாட்டுப்பொங்கல்
"சேற்றிலே" உன் கால் வைக்கும் முன்
தன் கால் வைத்து உழைத்த காளைக்கும்
"வீட்டிலே" தாய்ப்பால் சுரக்கும் முன்
தன் பால் தந்து காத்திடும் பசுவிற்கும்
நன்றிகள் ஆயிரம் சொல்வோம்
மாட்டுப் பொங்கல் திருநாளிலே..
காணும்பொங்கல்
உழவுக்கு வந்தனமிட்டோம்
உறவுக்கு சந்தனமிட்டோம்
பசுவுக்கு படையலிட்டோம்
பாசத்தின் உணர்விலிட்டோம்.
ஊரெல்லாம் பொங்கலிட்டது
உணர்வெல்லாம் பொங்கிவிட்டது
உழைத்திட்ட உள்ளங்களே!
களைத்திட்ட சோர்வுநீங்க
ஊரெல்லாம் கூடிடுவோம்
உளமார பாடிடுவோம்
இக்'காணும்' பொங்கலிலே...
அனைவருக்கும் இனிய 'தை' திருநாள்
பொங்கல் நல்வாழ்த்துக்கள் நண்பர்களே..
7 கருத்துகள்:
தைத்திருநாள் வாழ்த்துக்கள் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் கூறிய (ஸைபர்) கையோடு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களும் - அது உங்களுக்குப் பழக்கமாக இருந்தால் :ம
ரைட்டு..சங்கர்... பொங்கல் வாழ்த்துகள் :)
கவிமழை வாழ்த்துக்கு பாராட்டுகள் சங்கர்
இத்திருநாளில் எல்லாவளமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்
காணத் தை
கானத் தை என்றிருக்கவேண்டும்
விஜய்
நால் வகை கவிப்பொங்கலும்
நாவாட்டிச் சுவைக்க
நன்றாய்
இருக்கிறது
செமிபாட்டுச் சுரப்பிகள்!!
சங்கர் தை
பொங்க கல்.
பொங்கல் வாழ்த்துகள்.
எத்தனை பொங்கல் !
இத்தனை பொங்கலும்
எம் இனம் காணுமா இப்போ !
இனிய பொங்கல் வாழ்த்துக்கள் சங்கர்.
சங்கர்
உங்களுக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் தோழா...
ஜெகநாதன்
அழைத்த அன்பிற்கு வந்து
பின்னூட்டமும் நல் ஊக்கமும் தந்தமைக்கு
மிக்க நன்றி நண்பரே.
நன்றியுடன் வாழ்த்துக்கள்.
அசோக்
நன்றி அசோக் என்றும் எனது
வாழ்த்துக்கள் உங்களுக்கு..
விஜய்
நன்றி நண்பா
என்றும் துணை நிற்கும் உங்களுக்கு.
கலா
மிக்க நன்றி கலா உங்கள் தொடர் வருகை மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. வாழ்த்துக்கள்.
ஹேமா
உங்கள் இனமும் காணும் பொங்கல்
காணவேண்டும் பொங்கல் என்பது
எங்கள் கனவு தோழி..
வாணிநாதன்
மிக்க நன்றி தோழி எல்லோரும் நலம்பெற வாழ்த்துகிறேன்..
கருத்துரையிடுக