புதன், 16 செப்டம்பர், 2009

பொய்


உலகில் பொய் என்பது
எதுவும் இல்லை,
சொல்வது பொய் என்றால்
சொல்பவன் மெய்யே!
கானல் பொய் என்றால்
காண்பது மெய்யே!
வாழ்வது பொய் என்றால்
வாழ்க்கை மெய்யே!
வெளிச்சம் யார் மீது பட்டாலும்
நிழல் விழுவது போல்
உண்மையின் நிழல்தான் பொய்.
நிழலான பொய் எல்லாம்
நிஜமாய் நிலைப்பதில்லை,
சில உண்மைகளை மறைக்கும்
நிழல்கள்தான் அவை!
அஸ்தமனத்தில் உண்மை மட்டுமே
விளக்கேற்றும்...

2 கருத்துகள்:

கவிக்கிழவன் சொன்னது…

என்னால் பொய் சொல்ல முடியவில்லை உண்மையில் கவிதை நன்றாக உளது

ஹேமா சொன்னது…

உண்மைதான் பொய் என்பது தற்சமயத்திற்கு புகுந்து கொள்ளும் ஒரு போர்வை மட்டுமே.அங்கேயே இருந்துவிடமுடியாது.வெளியே வந்துதானே ஆகவேணும்.அதுதான் உண்மை.