வெள்ளி, 18 செப்டம்பர், 2009

சில வரிகள்..


நிழலை கண்டு
நிஜமாய் உருகாதே!
காட்சி பொருளெல்லாம் காணலே!
புற தோற்றம் புதுமைதான் அதில்
அகம் உருகுவது அர்த்தமற்றது.

செவ்வண்ண அந்தியே!
ஏனிந்த கோபம்?
வானில் முகிலின்றி
மகிழ முடியவில்லையா?

இரவின் விதவைக்கு
குங்கும பொட்டாய் வாழ்வு
தந்த காலை கதிரே!
உன்னொளி பட்டுவிட்டால்
எல்லாம் மங்கலமே!

இரவுகள் என்றும் நிரந்திரமாவை,
உறவுகள் எல்லாம் சிறு வெளிச்சம்களே!
தன் பங்கிற்கு எரிந்து விட்டு செல்லும்.
உன்னுள் நீ ஒளிர்ந்தால் மட்டுமே
வாழ்வு வெளிச்சமாய் அமையும்..3 கருத்துகள்:

kanmani சொன்னது…

Excellent, above ur growth of my wishes..take care.be happy.. very fine.thank u....

விஜய் சொன்னது…

அருமையான கருத்துக்கள். Just Remove word verification for comments.

ஹேமா சொன்னது…

சங்கர்,அத்தனை வரிகளுமே அர்த்தத்தோடு.இதில் எனக்கு மிகவும் பிடிக்கிறது.


//இரவின் விதவைக்கு

குங்கும பொட்டாய் வாழ்வு

தந்த காலை கதிரே!

உன்னொளி பட்டுவிட்டால்

எல்லாம் மங்கலமே!//