ஒரு போக்குவரத்து சாலை நிறுத்தத்தில்
நம் வலையுலக ஜாம்பவான்களின் வரிகள்
எப்படி இருக்குமென்று ஒரு சிறு கற்பனை..
நேசமித்திரன்
மேகம் புணர்ந்த துளிகளில் அழுக்ககற்றி குளித்தது
சேன்றோவின் வைபர் கைகள்,
மரித்துக்கொண்டிருந்த சிகப்பு வினாடிகளில்
கசிந்துகொண்டிருந்தது சைலன்சர் சுருட்டு.
மெர்சிடிசின் யன்னலில் நிழல் முகம்
ஒப்பனை செய்துகொண்டிருந்தது
சாலை கடந்த கிளையொன்று.
தரை புணர்ந்த தடம் விட்டுசென்றது
தண்ணீர் வாகனம் பச்சை ஒளி கடந்து...
பா.ரா
நின்ற வாகனத்தில் விழித்தெழுந்தான் பிஞ்சுக்கரம் பட்டு,
கைக்குழந்தையுடன் நின்றுகொண்டிருந்தாள் பெண்ணொருத்தி,
மாமாவ புடிச்சுக்கோ என்றாள் மூன்று வயது மகனிடம்,
பலூனுக்கு விழைந்து அழுதவனை அதட்டினாள்
உங்கப்பன் சரியா இருந்தா நமேக்கேன்டா
இந்த நிலைமையென்று குரல் தழுத்தாள்..
எங்கோ தப்புணர்ந்தவன் வேகமாய் இறங்கி
வாங்கி வந்தான் கைநிறைய பலூன்களுடன்
அழுத குழந்தையின் கைகளில் ஒன்றை திணித்து..
சிறு சிறு ஊதல்களில் பெரிதாகும் பலூனைப்போல்
சிறு சிறு ஊடல்களில் பெரிதாகும் பந்தம்
உணர்ந்தவனாய் விட்டுவந்த மனைவியையும்
குழந்தைகளையும் எண்ணி பேருந்து நிற்கும்முன்
இறங்கிகொண்டிருந்தது அவன்மனம்
அடுத்த நிறுத்தத்தில்....
(நேசமித்ரா, பா.ரா பிழையிருந்தால் மன்னியுங்கள்
உங்கள் நிழலாய் நானும் வரைந்து
வடித்து பார்க்கின்றேன் அவ்வளவே)
அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்..
19 கருத்துகள்:
அசலின் நகலுக்கு
எனது விசில்
புத்தாண்டு வாழ்த்துக்கள்
விஜய்
நேசன் அருமை
சித்தப்ஸ் கவிதையல வார்த்தைகள குறைக்கனும்.
நகல் அல்ல அசலே.
வாழ்த்துகள் (சத்தான) சங்கர் :)
ஹா..ஹா..
புத்தாண்டு வாழ்த்துக்கள் சங்கர் மக்கா!
சங்கர்
நகலில்லை அசல் .உற்றுணர்ந்து வாசித்திருப்பது வியப்பளிக்கிறது
பிரியங்களும் பேரன்பும் வாய்க்கடும் இப்புத்தாண்டில்
வாழ்த்துக்கள் பிறையே
விஜய்
முதல் விசிலுக்கு மிக்க நன்றி
நண்பா. புத்தாண்டு வாழ்த்துக்கள்.
அசோக்
உண்மைதான் நண்பரே அந்த யதார்த்த
சுருக்கம் இன்னும் வாய்த்திருக்கவில்லை.
மிக்க நன்றி நண்பரே. புத்தாண்டு வாழ்த்துக்கள்.
பா.ரா
நிரம்ப மகிழ்ச்சி மக்கா, உடனே தெரிந்து வந்துவாழ்த்தியமைக்கு பெருமகிழ்ச்சி புத்தாண்டு
வாழ்த்துக்கள் மக்கா.
நேசா
உணர கிடைத்த வார்த்தைகளை உணர்ந்து வாழ்த்தியமை மகிழ்ச்சி நண்பா. அருகருகேயான உங்கள் இருவர் பின்னூட்டமும்
நிறைக்கின்றது இந்த இடுக்கையை.
புத்தாண்டு வாழ்த்துக்கள் மக்கா.
முதல் - நேசமித்டிரன் போலே....
இரண்டாவது - சித்தப்பின் வரிகளில் குறைவான வார்த்தைகள் மட்டுமே.
தொடருங்கள் நண்பரே... சத்தா... சத்தமா... சுத்தமா எழதுங்கள் சங்கர். :-))
புத்தாண்டு வாழ்த்துகள். :-)
அசத்திட்டீங்க சந்தான சங்கர்
அட அடுத்து நானும் இதைதான் செய்ய எண்ணி இருந்தேன்
நீங்க முந்திக்கிட்டீங்களே சந்தான சங்கர்
புத்தாண்டு வாழ்த்துக்கள்
ரோஸ்விக்
நன்றி ரோஸ்விக் உங்கள் முதல்
வருகைக்கும் வாழ்த்துக்கும்.
தேனம்மை
நன்றி தோழி, என்னைவிட நீங்களே
அவர்களை நிறைய வாசித்திருக்கிறீர்கள்
எழுதுங்கள் தோழி.
புத்தாண்டு வாழ்த்துக்கள்
அருமை. அருமை.
இது அசல் இல்ல சங்கர்.அசத்தல்.
அப்பிடியே அவங்களை உணர்ந்து எழுதியிருக்கீங்க.நானும் எழுதிப் பாக்கணும்.அன்பான வாழ்த்துக்கள்.
nalla muyarchi....
athil vetriyum petrulleerkal..:)
puthrthaandu vaazhthukal..!
கலக்கிடீங்க தல..புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்...
மலிக்கா
வருகைக்கும் வாழ்த்துக்கும்
மிக்க நன்றி தோழி..
ஹேமா
மிகுந்த மகிழ்ச்சியும்
உற்சாகமும் தருகின்றது தோழி
உங்கள் வாழ்த்து.
இரசிகை
மிக்க நன்றி ரசிகை
நேசனின் ரசிகையின் வாழ்த்து
கிடைத்தது நிறைவு..
கமலேஷ்
மிக்க நன்றி நண்பா
தொடர்ந்து வசிக்க விழைகிறேன்..
//சிறு சிறு ஊதல்களில் பெரிதாகும் பலூனைப்போல்
சிறு சிறு ஊடல்களில் பெரிதாகும் பந்தம்
உணர்ந்தவனாய் விட்டுவந்த மனைவியையும்
குழந்தைகளையும் எண்ணி பேருந்து நிற்கும்முன்
இறங்கிகொண்டிருந்தது அவன்மனம்
அடுத்த நிறுத்தத்தில்.... //
ச.சங்கர்,
அருமையான நிஜம்.
புத்தாண்டு வாழ்த்துகள்.
ரெண்டுமே செமையா இருக்கு சங்கர். ரொம்ப பிடிச்சிருக்கு
நேசன் அப்படியே ஆனால் பாரா கொஞ்சம் மாத்தனும் நண்பரே
ரெண்டுமே அருமை நுணுக்கமான அவதானிப்பு
நகல் - நிழல் - தழுவல்: கலக்கல் சந்தான சங்கர்! நீங்கள் நல்ல சத்தான சங்கரும் கூட!!
சீக்கிரம் நம் காலடியின் கவிஞர் அடையாள அட்டை பெற்றுக் கொள்ளவும்!
நவாஸ்
மிக்க நன்றி நவாஸ் நண்பா.
பாலா
உண்மைதான் நண்பா பா.ரா வின் பாரா சற்று குறைந்திருக்கவேண்டும்.
மிக்க நன்றி பாலா.
ஜெகநாதன்
மிக்க நன்றி நண்பர் ஜெகநாதன்
உங்களைபோன்றவர்களின் பின்னூட்டம்
எப்பொழுதும் வளர்ச்சியின் பாதையே..
excellent....more than try again..thank & wishes..
கருத்துரையிடுக