வெள்ளி, 31 ஜூலை, 2009

உப்பு


கண்ணீர் சிந்தவில்லை,
வியர்வை சிந்தவில்லை,
வாழ்வே! உப்பானது மீன்களுக்கு.

கண்ணீர் சிந்தினான்,
வியர்வை சிந்தினான்,
உப்பே! வாழ்வானது மனிதனுக்கு.

காதல்

ஒரு உள்ளம்
ஒரு உள்ளத்திடம்
தோல்வி அடையும்போது
அதன் உணர்வுகள்
வெற்றி அடைகின்றது.

மனசு

அறிவுக்கும் மனசுக்கும் சிக்கல்
இருக்கும்போது நீ மனசு
சொல்வதை மட்டும் கேள்,
அறிவை கேட்காதே! ஏனென்றால்
அறிவுக்கு அனைத்தும் தெரியும்
மனசுக்கு உன்னை மட்டுமே தெரியும்.

உன்னைப்போல்

எல்லோரும் உன்னைப்போல்
இருக்க வேண்டும் என்றால்
உன் அறிவுதான் இந்த உலகத்தின்
அறிவாக இருக்கமுடியும்.

மனிதன்

எல்லோருக்கும் பகைவனாக
இருக்க முடியாது,
எல்லோருக்கும் நண்பனாகவும்
இருக்க முடியாது, ஆனால்
எல்லோருக்கும் மனிதனாக
இருக்க முடியும்.

வெள்ளி, 24 ஜூலை, 2009

நிலவே!


ஆயிரம் விளக்குகள்
மின்னி மறைந்தாலும்
உன் புன்னகை மட்டுமே!
நிரந்திர ஒளி என நம்பிக்கையில்
உறங்குகின்றேன்.

நிலவே!


நீ தேய்பிறை என்றாலும்,
வளர்பிறை என்றாலும்,
நீ எனக்கு பிழை இல்லையடி..