நத்தையிட்ட ஈரம்போல்
நகர்ந்துகொண்டிருந்த பின்னிரவு,
அரவமற்ற அறையினில்
அழுதுகொண்டே தீர்ந்துகொண்டிருந்த
மெழுகுவர்த்தியாய் அவள்..
மது நீர்த்து மாது தீர்த்திட
கூலி கொடுக்கிறது மாமிச பட்சி,
பட்சியாய் நுழைந்ததெல்லாம்
பச்சையாய்.....!
வீணையவள் மீட்டப்படுகிறாள்
ஈன ஸ்வரங்களாய்..
மீட்கப்பட முடியாமல்...
தந்தியறுத்து தந்தியறுத்து
பிணைக்கப்படுகிறாள் மீண்டும்
பந்தி படைக்க..
என்றோ பூக்களைகூட பாரமென
வீசியவள் தலைக்கனம்
சகவாச சேற்றினில் விழுந்து
புரளமுடியாமல் புலம்புகிறது..
நாதியறுத்து வந்தவளின்
நாடியறுக்கும் உலகினில்..
மாலையின் முற்பொழுதொன்று,
ஆயிரமாயிரம் சுக துக்க சமிக்கைகளை
தாங்கி நின்ற தந்தி கம்பமொன்றில்
பசுவும் இளம் கன்றும் ஒன்றாக
பிணைக்கப்பட்டிருந்தது ஓரடி கயிற்றினில்..
பசியுற்ற கன்று பசுவின் மடி தேட எத்தனித்தது,
கயிற்றின் கருணைக்குறைவால் கழுத்தழுந்தியது.
கன்றுணர்ந்த பசுவும் மடி கொடுக்க முயன்று முயன்று
தோற்றது பிடி கொடுக்காத கயிற்றின் முனையில்..
தந்திக்கம்பத்துக்கும் பசுவுக்கும் இடையில்
கயிறு வீணையிட்ட தந்தியாய் துடித்தது,
எங்கோ அழு குரல் கேட்டு விழிக்கின்றான்
உண்டு களைத்த கறவைக்காரன்..
கறக்க வந்தவன் கட்டவிழ்க்கின்றான்
கன்றுக்கு கண நேர அனுமதியுடன்..
கயிற்றில் புண்பட்ட பசு கன்றின் மெய்பட்டு
சிலிர்த்து முத்தமிட்டது மொத்த ரணம் தீர்ந்ததாய்..
முட்டிக்குடித்த கன்று பிரிக்கப்பட்டது
கருணையின் நேரம் தீர்ந்ததாய்..
இனி மடியின் குருதி வரை
கறக்கவிழைபவனை பார்க்கின்றது,
நிசியில் வன்புணரும் கடைசிக்காமுகனுக்கு
பொறுத்துக்கொண்டு கை இறுக்கும் தாசியைப்போல்...
(இது உரையாடல் சமுக கலை இலக்கிய அமைப்பு
நடத்தும் கவிதை போட்டிக்காக எழுதப்பட்டது.)
மாரில் தங்கமறுத்த பாலுக்கு
விழைந்து வீறிட்ட குழந்தையை
இடுப்பில் தக்க வைத்து
இறைஞ்சுகிறாள்...
இரக்கமற்றவனின் வாகன யன்னலும்
இறங்க மறுக்கின்றது..
சிவப்பு விளக்கு நிறுத்தத்தில்
பச்சிளம் தளிரின் பசி நிறுத்தமுடியாமல்..
யாசித்தவனுக்கு
யோசித்து சட்டைப்பை தடவி
தொட்டு விழுந்த ஒற்றை காசில்
திறந்தது பசியடைத்த செவிகள்..
விருந்தொன்றில்
பசியற்றவன் புசித்த மிச்சம்
நிரப்புகின்றது குப்பைத்தொட்டியின்
வயிற்றினை..
யாக்கையின்
முதல் வேட்கை
தணிய துணிந்த
பிச்சையாய்...
கண்ணாடி முன்
கவிதையாய்
நான்..
கவிதையின்
அர்த்தமாய்
என்றும் நீ..
இதயத்தில்
உன்னை
தேடினேன்...
என்னை
தொலைத்துவிட்டு..
பெரிதான
அன்பின் முன்
சிறிதாகிபோன
உயிர்...
சிறிதான
உயிரிலும்
பெரிதாக
கலந்தது
உன் அன்பு..
நீயும்
நானும்
பற்றிக்கொள்ள
பற்றிக்கொண்டது
காதல்
நெருப்பு..
மௌனம் சம்மதத்திற்கு பொருந்தும்
சங்கடங்களுக்கு பொருந்தாது
சங்கடத்தின் மௌனம் உன்னை
சப்தமாக கொன்றுவிடும்.
தியாகத்தில் திரியாய்
தீபத்தின் ஒளியாய் நீ
பிரகாசித்தாலும் நம்பிக்கை எனும்
எண்ணை இல்லாவிடில் உன்னால்
நிரந்திரமாய் பிரகாசிக்க முடியாது.
ஒரு பொய்க்கு உண்மையான
காரணம் இருக்கும்,
ஒரு உண்மைக்கு பொய்யான
காரணம் இருக்கமுடியாது.
காலம் கடந்த ஞானம்
முற்றுபெறுவதில்லை
காலங்களை கடந்த ஞானம்
விட்டுப்பிரிவதில்லை.
உலகை வெளிச்சமாக்கிய சூரியனால்
உன்னை வெளிச்சமாக்க முடியாது
உன்னில் நீ பிரகாசித்துவிட்டால்
உன்னாலும் இவ்வுலகை
பிரகாசிக்க வைக்க முடியும்.
அன்பை எடுப்பவன் ஆயுதத்தைவிட
கூர்மையானவன்,
ஆயுதத்தை எடுப்பவன் அன்பினால்
கூர்மையாக்கப்படாதவன்.
அன்பு நண்பர் விஜய்க்காக....
1.A- Available/single - single but not reachable
searching for a kind...
2.B- Best Friend - நிறைய நண்பர்கள் பட்டியலிட்டு
பார்க்கவேண்டுமா?
3 C - Cake or pie - இரண்டுமில்லை
4 D - Drink of choice - காபி (bru
5 E - Essential items you use everyday - My bike Suzuki Access125
6 F - Favorite Colour - ரோஸ்
7 G - Gummy bears or worms - இரண்டும் இல்லை
8 H - Hometown - கரூர்
9 I - Indulgence - வலைத்தளம்
10 J - January or February - போகி,
11 K - Kids and their names - இன்னும் மணமாகவில்லை
12 L - Life is incomplete without - ரசனை
13 M - Marriage date - சொல்லப்படாத கவிதை
14 N - Number of siblings - 1 அக்கா உஷா
15 O - Oranges / Apples - ஆப்பிள்
16 P - Phobias / Fears - இயற்கை அழிவுகள்
17 Q - Quotes for today - silence is the sound of soul
violence is the mute of soul
18 R - Reason to smile - மழலைகள்
19 S - Season - குளிர்காலம்
20 T - Tag 4 people - எல்லோரும் ஒரு ரவுண்டு வந்துட்டாங்க.
21 U - Unknown fact about me - மூன்று வருடங்களுக்கு முன் மூன்றாம்பிறை கவிதை தொகுப்பு வெளியிட்டது.
22 V - Vegitable you dont like - அப்படி எதுவும் இல்லை.
23 W - Worst habbit - வெளுத்ததெல்லாம் பால்
24 X - Xrays you had - வலது கையில்
25 Y - Your favorite food - இட்லி பூண்டு சட்னி (காரமா)
26 Z - Zodiac sign - மீனம்
அன்பிற்குரியவர்கள் - அனைத்து நட்பும்
ஆசைக்குரியவர்கள் - எதிர்பார்ப்பின் விளிம்பில்
இலவசமாய் கிடைப்பது - மழை, மழலை மொழிகள்.
ஈதலில் சிறந்தது - அன்பான பசியாற்றல்
உலகத்தில் பயப்படுவது - உலக வெப்பமடைதல்
ஊமை கண்ட கனவு - சொல்ல தெரியவில்லை.
எப்போதும் உடன் இருப்பது - Nokia 6021
ஏன் இந்த பதிவு - நட்புக்காக
ஐ - ஐஸ்வர்யத்தில் சிறந்தது - தக்க சமயத்தில் உதவுவது
ஒரு ரகசியம் - அன்பைவிட கூர்மையான ஆயுதம் இல்லை
ஓசையில் பிடித்தது - புல்லாங்குழல்
ஔவை மொழி ஒன்று - ஆறுவது சினம்
நன்றிகள் பல என் வலை நண்பர்களுக்கு...
இளையராஜாவின் இசையில் சங்கீதமேகம் தேன் சிந்தும் நேரம்...பாடல் எல்லோரும் கேட்டிருப்பீர்கள்.அதில் சில வரிகள் மாற்றி ஓர் பாடல்.ஆனந்த நேசம் உன் வாழ்வில் வீசும் பொன்மாலை தீபம் சூடும் நேரம்..ராகம் ஒரு தீபமே! என்னில் ஒளி வீசுமே!வீசும் ஒளி யாவும் என் பாசமே!ஆனந்த நேசம்..... காணும் கனவுகள் கண்ணிலே காலம் வரைந்திடும் உன்னிலே வீணை மொழிதனில் வானை அழைத்திட நீ...ஓடி வா...எந்தன் ஏட்டில் வந்த பாட்டில் இசையாய் ஒலித்தேன்,எந்தன் ஏட்டில் வந்த பாட்டில் இசையாய் ஒலித்தேன் பாடல் ஓர் தேடலே...ஆனந்த நேசம்...அன்பு என்னும் கீதமே!ஆள பிறந்திடும் நாதமே!உள்ள விழிகளில் வெள்ளம் பெருகிடும் ஓர் ஜீவனே!உன்னை தீட்டும் எந்த பாட்டும் உறங்கா உறவே!உன்னை தீட்டும் எந்த பாட்டும் உறங்கா உறவே!பாடல் ஓர் தேடலே....ஆனந்த நேசம் உன் வாழ்வில் வீசும், பொன்மாலை தீபம் சூடும் நேரம்..ராகம் ஒரு தீபமே! என்னில் ஒளி வீசுமே!வீசும் ஒளி யாவும் என் பாசமே!(குறை இருந்தால் மன்னிக்கவும்)நன்றி.