புதன், 5 ஆகஸ்ட், 2009

நட்சத்திரங்கள்

வானில் மின்னிய நட்சத்திரங்களை
எண்ணி களைத்தேன்,
நட்சத்திரங்கள் கூறியது,
மின்னியதெல்லாம் எண்ணிவிட முடியாது
உன் வாழ்வில் நீ எண்ணியதெல்லாம்
மின்னிவிட முயற்சி செய் என்று...

செவ்வாய், 4 ஆகஸ்ட், 2009

நிழல்

நிழலுக்கு உண்மை நிஜம்
நிஜத்திற்கு பொய் நிழல்.
நிழல் நிஜமாகும்போது
பொய் மறைகின்றது.
நிஜம் நிழலாகும்போது
உண்மை மறைகின்றது.

என்றும்

அடிமைப்படுத்தாத அன்பும்
கட்டுப்படுத்தாத சுதந்திரமும்
என்றும் நிலைத்திருக்கும்.

உளிகள்

உளிகளை தாங்கிய
சிலைகள்தான் வடிவம் பெரும்,
அலைகளை தாங்கிய
கரைகள்தான் அழகு பெரும்,
வலிகளை தாங்கிய
உள்ளம்தான் வாழ்வு பெரும்.

எதிரியாய்

நல்ல விஷயங்களுக்கு

நண்பனாய் இருப்பதைவிட

கெட்ட விஷயங்களுக்கு

எதிரியாய் இருப்பதே மேல்.

மனிதன்

மனிதன் உறங்கும்போது
கனவுகளில் விழிதிருக்கின்றான்,
விழித்திருக்கும்போது
நினைவுகளில் உறங்குகின்றான்.

நேற்றைய சோகங்களில்
இன்றைய நிமிடங்களை கரைப்பது
நாளைய வாழ்வை தொலைப்பதாகும்.

பிரிவதில்லை

அன்பு நெஞ்சங்கள்
அருகில் இருந்தால் என்ன?
தொலைவில் இருந்தால் என்ன?
உண்மையான அன்பும் நட்பும்,
என்றும் பிரிவதில்லை...